டி-20 உலக கோப்பை வெற்றி.. டிராவிட், லட்சுமணன், அகர்கருக்கு நன்றி.. கௌதம் கம்பீர்!

Gautam Gambhir: இந்தியாவின் T20 உலகக் கோப்பை வெற்றியை முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், டிராவிட் மற்றும் லக்ஷ்மணுக்கு அர்ப்பணித்தார்.

Published on: March 9, 2026 at 11:44 am

புதுடெல்லி, மார்ச் 9, 2026: இந்தியாவின் டி-20 உலகக் கோப்பை வெற்றியை முன்னாள் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளருமான கவுதம் கம்பீர், ராகுல் டிராவிட் மற்றும் வி.வி.எஸ் லக்ஷ்மணுக்கு அர்ப்பணித்தார்.

மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் அஜித் அகர்கருக்கு நன்றி தெரிவித்தார். தனது வாழ்க்கையில் ஏற்பட்ட “அனைத்து தாழ்வுகளிலும்” தன்னுடன் இருந்தவர்களை வெளிப்படையாகக் கூறினார். இது குறித்து பேசிய கௌதம் கம்பீர், “இந்த வெற்றி தனிப்பட்ட புகழை விட, இந்திய கிரிக்கெட் அமைப்பின் வலிமையை பிரதிபலிக்கிறது” என்றும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து, “இந்த வெற்றி ராகுல் டிராவிட், வி.வி.எஸ் லக்ஷ்மண் போன்ற முக்கிய நபர்களின் பங்களிப்பையும், இந்திய கிரிக்கெட் அமைப்பின் கொள்கைகளையும் காட்டுகிறது. தனிநபர் புகழை விட, அமைப்பின் வலிமையே முக்கியம்” என்றார்.

பத்திரிகையாளர் சந்திப்பு…

அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மிகவும் கவனத்தை ஈர்த்த பகுதி இதுதான். பொதுவாக தனது உணர்ச்சிகளை வெளிப்படையாகச் சொல்லாத கவுதம் கம்பீர், தனது “தாழ்வு காலங்களை” குறிப்பிட்டு பேசினார். அஜித் அகர்கர் பெயரும் அந்த நன்றி பட்டியலில் இடம்பெற்றது; ராகுல் டிராவிட் மற்றும் வி.வி.எஸ் லட்சுமணன் குறித்து பேசுகையில், அவர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு செய்த பங்களிப்பு அளப்பரியது என்றார்.

இதையும் படிங்க: டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி.. இந்தியா- நியூசிலாந்து இன்று மோதல்..வெல்லப்போவது யார்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com