சினமுற்ற குந்தவை.. மன்னிப்பு கோரிய சின்ன பழுவேட்டரையர்.. என்ன நடந்தது?

Parthiban: நடிகர் பார்த்திபனின் ஆட்சேபத்துக்குரிய கருத்துக்கு, நடிகை திரிஷா பதிலடி கொடுத்துள்ளார்.

Published on: March 9, 2026 at 11:25 am

சென்னை, மார்ச் 9, 2026: திரிஷா கிருஷ்ணன் தனது பெயரும் புகைப்படமும் ஒரு நிகழ்ச்சியில் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தனது மௌனத்தை உடைத்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி சில கருத்துகள் கூறப்பட்டன. இந்நிலையில், திரிஷா, “என் பெயருடன் இணைத்து பயன்படுத்தப்பட்ட மோசமான வார்த்தைகள் குறித்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். இது தேவையற்றதும், மரியாதையற்றதும் ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த நடிகர் பார்த்திபன், பின்னர் தனது கருத்துகளுக்காக வருத்தம் தெரிவித்தார். “அந்த வார்த்தைகள் சொல்லப்பட வேண்டியவை அல்ல. நான் அதற்காக வருந்துகிறேன்” என்று அவர் கூறினார்.

என்ன நடந்தது?

நடிகர் பார்த்திபன் நிகழ்ச்சி ஒன்றில், நடிகை திரிஷாவின் குந்தவை கதாபாத்திரத்தை நினைவு கூர்ந்து, குந்தவை வீட்டில் குந்தி இருந்தால் நல்லது எனப் பொருள்படும்படி கூறி இருந்தார்.
இது பெரும் சர்ச்சையான நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த நடிகை திரிஷா, மைக் கிடைத்தால் எதை வேண்டுமானாலும் பேசலாமா? இது அசிங்கமானது, முட்டாள்தனமானது எனத் தெரிவித்து இருந்தார்.

பார்த்திபன் வருத்தம்

இதற்கு வருத்தம் தெரிவித்த நடிகர் பார்த்திபன், “எது நடந்ததோ அது தவறாக நடந்துள்ளது. எனது கருத்துக்களாக வருந்துகிறேன்” என்றார்.

இதையும் படிங்க: கல்கி படத்தில் வில்லனாக நடிக்கிறாரா கமல்ஹாசன்? பரபரப்பு தகவல்கள்!

தவறான ரயிலில் ஏறிவிட்டால் துன்பப்படுவதை விட இறங்குவது மேலானது.. விவாகரத்து குறித்து ஹன்சிகா மோத்வானி
Hansika Motwani

தவறான ரயிலில் ஏறிவிட்டால் துன்பப்படுவதை விட இறங்குவது மேலானது.. விவாகரத்து குறித்து ஹன்சிகா

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com