Best flexi cap funds: மாதம் ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி, ரூ.9.65 லட்சமாக உயர்வு!

Best flexi cap funds: மாதம் ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி.யை, ரூ.9.65 லட்சமாக உயர்த்திய டாப் ஃப்ளெக்ஸி கேப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

Published on: March 5, 2026 at 2:10 pm

சென்னை, மார்ச் 5, 2026: 2026ஆம் ஆண்டில் மீண்டும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன ஃப்ளெக்ஸி-கேப் நிதிகள் குறித்து இதில் பார்க்கலாம். இந்த வகை ஃபண்ட்கள், பல மாதங்களாக முதலீட்டாளர்களின் முதன்மைத் தேர்வாக இருந்து வருகின்றன. இதற்கிடையில், ஏ.எம்.எஃப்.ஐ (AMFI) தரவுகளின்படி, 2026 தொடக்கத்தில் ஃப்ளெக்ஸி-கேப் நிதிகளில் முதலீடுகள் மேலும் வலுவடைந்துள்ளன. இந்நிலையில், டாப் 3 ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட்கள் குறித்து பார்க்கலாம்.

  1. ஹெச்.டி.எஃப்.சி ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் – நேரடி திட்டம்

ஹெச்.டி.எஃப்.சி ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் திட்டத்தின் 5 ஆண்டுகால லம்ப்சம் முதலீடு ரிட்டன் 20.36 சதவீதம் சி.ஏ.ஜி.ஆர் ஆகும். அதாவது ரூ.1 லட்சம் முதலீடு 5 ஆண்டுகளில் ரூ.2.52 லட்சமாக உயர்ந்துவிடும்.
அந்த வகையில், ஒரு மாதத்திற்கு ரூ.10,000 எஸ்.ஐ.பி-ஐ 5 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியிருந்தால், அது தற்போது சுமார் ரூ.9.65 லட்சம் மதிப்பாக இருக்கும்.

  1. குவாண்ட் ஃபெ்ளெக்ஸி கேப் ஃபண்ட் – நேரடி திட்டம்

குவாண்ட் ஃபெ்ளெக்ஸி கேப் ஃபண்ட் திட்டத்தின் லம்ப்சம் முதலீடு கடந்த 5 ஆண்டுகளில் 20.20 சி.ஏ.ஜி.ஆர் ரிட்டன் வழங்கியுள்ளது. இதில் ரூ.1 லட்சம் முதலீடு 5 ஆண்டுகளில் ரூ.2.51 லட்சமாக உயர்ந்து இருக்கும்.
ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி 5 ஆண்டுகளில் ரூ.8.41 லட்சமாக உயர்ந்திருக்கும்.

  1. பேங்க் ஆஃப் இந்தியா ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் – நேரடி திட்டம்

பேங்க் ஆஃப் இந்தியா ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் கடந்த 5 ஆண்டுகளில் 20.06 சதவீத சி.ஏ.ஜி.ஆர் ரிட்டன் வழங்கியுள்ளது. இதில் ரூ.1 லட்சம் லம்ப்சம் முதலீடு ரூ.2.49 லட்சமாக உயர்ந்து இருக்கும். அதுவே ரூ.10 ஆயிரம் மாதாந்திர எஸ்.ஐ.பி 5 ஆண்டுகளில் ரூ.9.10 லட்சமாக உயர்ந்திருக்கும்.

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. கடந்த கால வருவாய் தரவுகள், எதிர்கால ரிட்டனுக்கு உத்தரவாதம் அளிக்காது.

இதையும் படிங்க: பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை திருத்திய பஞ்சாப் நேஷனல் வங்கி.. மற்ற வங்கிகளில் ரிட்டன் எப்படி?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com