நீதிக்காக போராடும் வழக்கறிஞர் தாப்ஸி பன்னு.. அஸ்ஸி படத்துக்கு ஏ சான்றிதழ் ஏன்?

Taapsee Pannu: நடிகை தாப்ஸி பன்னுவின் புதிய படமான அஸ்ஸி மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் அவர் நீதிக்காக போராடுகிறார்.

Published on: March 2, 2026 at 1:19 pm

மும்பை, மார்ச் 2, 2026: பாலிட் சினிமாவில், பல ஆண்டுகளாக பல்வேறு வகை கதாபாத்திரங்களில் நடித்துவரும் பாலிவுட் நடிகை தாப்ஸி பன்னு, யாராலும் ஈடுகொடுக்க முடியாத அளவுக்கு ஆழமாக நடித்து வருகிறார். இதற்குக் காரணம், தாப்ஸி தனது பல்துறை நடிப்பால் மக்களின் மனதை தொடும் திறன் கொண்டவர். அதையே அவர் தனது சமீபத்திய நீதிமன்ற படகமான அஸ்ஸியில் வெளிப்படுத்தியுள்ளார்.

அனுபவ் சின்ஹா இயக்கியுள்ள இந்தப் படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. இதில் வழக்கறிஞர் ராவி என்ற பாத்திரத்தில் தாப்ஸி, பாலியல் வன்முறையைச் சுற்றியுள்ள ஒரு சக்திவாய்ந்த வழக்கை எடுத்துக்கொண்டு நீதிக்காக போராடுகிறார். இந்தப் படம் குறித்து பேசிய தாப்ஸி பன்னு, “அஸ்ஸி படக்குழு மிகவும் அழகான, துணிச்சலான ஒரு முயற்சியை எடுத்துள்ளது. ஏனெனில், நீங்கள் சொன்னதுபோல, எங்கோ நம் மனதின் அடிநிலையிலே சாதாரணமாகிவிட்ட ஒரு விஷயத்தை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், “இப்போது என்ன நடக்கிறது தெரியுமா, துரந்தர் போன்ற படங்கள் வெற்றி பெறும்போது. அது முற்றிலும் வேறு வகை, வேறு பாணி. பெரிய படங்கள் வெற்றி பெறும்போது மக்கள் நம்பத் தொடங்குகிறார்கள்” என்றார்.

இதையும் படிங்க: சமூக வலைதள ட்ரோல்கள்.. ரசிகர் கேள்வியும், சமந்தா பதிலும்!

ஏ சான்றிதழ்- ஏன்?

தொடர்ந்து பேசிய தாப்ஸி பன்னு, “ சில நேரங்களில், நான் பெயர்கள் சொல்ல விரும்பவில்லை, ஆனால் மிகுந்த வன்முறை கொண்ட படங்களுக்கு நாம் யூ.ஏ (U/A) சான்றிதழ் பெறுகிறோம். ஆனால் எங்கள் படம் அஸ்ஸிக்கு ஏ (A) சான்றிதழ்.

நான் புரிந்துகொள்கிறேன், இது பார்ப்பதற்கு கடினமான படம். ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு தான் இப்படிப் பட்ட உரையாடல்களை நடத்த முடியும். ஆனால், நம் குழந்தைகளுடன் பேச முடியுமென நான் உண்மையிலேயே விரும்புகிறேன். ஏனெனில், அவர்கள் தான் வளர்ந்து பெரியவர்களாகி, இதை அனுபவிப்பவர்களாகவோ அல்லது இதைச் செய்வவர்களாகவோ மாறுகிறார்கள்” என்றார்.

இதையும் படிங்க: துபாயில் தூக்கமில்லா இரவுகள்.. நடிகை நர்கிஸ் பாக்ரி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com