Narendra Modi: தி.மு.க, காங்கிரஸ் ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
Narendra Modi: தி.மு.க, காங்கிரஸ் ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

Published on: March 2, 2026 at 12:28 pm
மதுரை, மார்ச் 2, 2026: பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1, 2026) மதுரையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அப்போது, தி.மு.க, காங்கிரஸ் ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகளை மீண்டும் கொண்டுவர பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் கொண்டுவந்த நடவடிக்கைகயும் அவர் கூறினார்.
இது தொடர்பாக மதுரை பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ஜல்லிக்கட்டுக்கு காங்கிரஸ் தடைவிதித்தது.. நம் (பா.ஜ.க) அரசு இந்தத் தடையை நீக்கியது.
மேலும், திமுக ஆதரவில் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது ஜல்லிக்கட்டை தடை செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது என்பதையும் நான் இந்தத் தருணத்தில் நினைவு கூர்கிறேன்” என்றார்.
தொடர்ந்து, “நம்முடைய பாஜக அரசு தான் அவசரச் சட்டம் பிறப்பித்து ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது” என்றார். தொடர்ந்து, பாராளுமன்றத்தில் செங்கோலுக்கு பெருமிதமானதொரு இடத்தை அளித்து நாம் தான் தமிழ் கலாசாரத்திற்கு மரியாதை அளித்தோம்” என்பதையும் பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார்.
இதையும் படிங்க: நம் ஆட்சி அமைந்ததும் போதை மாஃபியாக்களுக்கு ஜெயில்.. பிரதமர் மோடி எச்சரிக்கை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com