210 தொகுதிகளில் வெல்வோம்.. மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு!

Assembly Election 2026: தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும் என முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Published on: March 2, 2026 at 9:53 am

Updated on: March 2, 2026 at 10:05 am

மதுரை மார்ச் 1.2026; தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் மதுரையில் இன்று நடைபெற்றது; இந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ” தேசிய ஜனநாயக கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என்றார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ” தேசிய ஜனநாயக கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும்; தமிழ்நாட்டில் மக்கள் விரோத இந்த திமுக அரசாங்கம் தூக்கி எறியப்பட்டு அதிமுக ஆட்சி அமைக்கும். இந்த மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற நாம் உறுதி கொண்டிருக்க வேண்டும்.” என்றார்.

மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டார். தொடர்ந்து இதற்காக நாம் தேனீக்களை போன்று எறும்புகளைப் போன்று கடினமாக உழைக்க வேண்டும் எனவும் தொண்டர்களை பார்த்து எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க; திமுக கூட்டணியில் 33 தொகுதிகளை எதிர்பார்க்கும் காங்கிரஸ்.. பரபரப்பு தகவல்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com