K. Selvaperunthagai: 2026 சட்டமன்ற பொது தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவுடன் மட்டும் தான் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்துகிறோம் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
K. Selvaperunthagai: 2026 சட்டமன்ற பொது தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவுடன் மட்டும் தான் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்துகிறோம் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

Published on: February 28, 2026 at 2:20 pm
சென்னை பிப்ரவரி 28, 2026; தமிழ்நாட்டில் சட்டமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸும் அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சியும் அங்கம் வகிக்கின்றன. இதற்கிடையில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியில் சலசலப்புக்கள் இருப்பதாக தகவல்கள் பரவின.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் திமுக பங்கு அளித்தால் மட்டுமே கூட்டணி என பேசினார்கள். இதற்கு பதில் அளித்த தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு க ஸ்டாலின் ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிப்பது என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது என கூறினார். இதற்கிடையில் இன்று திமுக மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, திமுக காங்கிரஸ் கூட்டணியில் வலுவான நம்பிக்கையான பேச்சு வார்த்தை தொடர்கிறது காங்கிரஸ் கூட்டணி மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரின் கருத்து, தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டது என்றார். மேலும் தாம் திமுக தவிர வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்ற தகவலையும் செல்வப் பெருந்தகை கூறினார்.
இதையும் படிங்க: 7வது முறையாக தி.மு.க ஆட்சி.. இதுவே நீங்கள் எனக்கு வழங்கும் பிறந்தநாள் பரிசு.. மு.க ஸ்டாலின்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com