டி-20 உலகக் கோப்பை.. இங்கிலாந்து, நியூசிலாந்து இன்று மோதல்!

ICC Men’s T20 World Cup: டி-20 உலகக் கோப்பை இன்றைய கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

Published on: February 27, 2026 at 5:09 pm

கொழும்பு, பிப்.27, 2026: ஐ.சி.சி ஆண்கள் டி-20 உலகக் கோப்பை போட்டியில், இன்று (வெள்ளிக்கிழமை) இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
இந்த சூப்பர் 8 குழு 2 போட்டி கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானத்தில் மாலை 7 மணிக்கு தொடங்குகிறது.

முன்னதாக, நேற்றிரவு, இந்தியா அணி சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான சூப்பர் எட்டு ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியா தனது கடைசி சூப்பர் எட்டு ஆட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை, கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த ஆட்டத்தின் முடிவு இந்தியாவின் உலகக் கோப்பை பயணத்தை தீர்மானிக்கும்.

இந்த நிலையில், அரையிறுதி போட்டிகள் மார்ச் 4 மற்றும் 5 ஆம் தேதி நடைபெறுகின்றன. இறுதிப் போட்டி மார்ச் 8ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம் மிகவும் தீர்மானிக்கும் தருணமாக இருக்கும். இந்தியா வென்றால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகம்.
முன்னதாக, இந்தியா தனது முதல் சூப்பர் 8 ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு சற்று சிக்கலானது. இதற்கிடையில், இந்தியா ஜிம்பாப்வே அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றதால் மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஹாக்கி போட்டி.. ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா

சென்னை சேப்பாக்கத்தில் ஜிம்பாப்வேவை எதிர்கொள்ளும் இந்தியா.. வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு!
T20 World Cup

சென்னை சேப்பாக்கத்தில் ஜிம்பாப்வேவை எதிர்கொள்ளும் இந்தியா.. வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com