நடிகர்கள் கோடிகளில் சம்பாதித்தாலும்.. இதில் கவனம்.. தமன்னா எச்சரிக்கை

Tamannaah Bhatia: நடிகைகள் கோடி கோடியாய் சம்பாதித்தாலும், பணத்தை சரியாக முதலீடு செய்ய வேண்டும் என நடிகை தமன்னா கூறியுள்ளார்.

Published on: February 25, 2026 at 9:55 pm

Updated on: February 25, 2026 at 9:56 pm

மும்பை, பிப்.25, 2026: நடிகை தமன்னா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நடிகைகளின் நிதி முதலீடு குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது, “நடிகர்- நடிகைகள் “மிகுந்த பணம்” சம்பாதித்தாலும், அதை சரியாக நிர்வகித்து, பெருக்கிக்கொள்ளா விட்டால், எதுவும் இல்லாமல் போகும் அபாயம் இருக்கிறது” என்றார்.


மேலும், “திரைப்படத் துறை கணிக்க முடியாதது; எனவே சரியான நிதி திட்டமிடல், சேமிப்பு மற்றும் முதலீடுகள் அவசியம். இல்லாவிட்டால் தங்களது பணத்தை விரைவாக இழக்கக்கூடும்” என்றார்.

தொடர்ந்து பேசிய நடிகை சமந்தா, “நடிகர்களுக்கு குறிப்பாக இது அடிக்கடி நடக்கும் விஷயம். நீங்கள் தொடர்ந்து நிறைய பணம் சம்பாதிக்கக் கூடும். குறிப்பாக, அதை சரியான நேரத்தில் சேமிக்கவில்லை அல்லது அதை பெருக்கிக் கொள்ளும் வழிகளை கண்டுபிடிக்கவில்லை என்றால் இது உங்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக மாறும்” என்றார்.
மேலும், “இறுதியில் அதில் அதிகம் எதுவும் மீதமிருக்காது என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள். ஆகவே சரியான நேரத்தில் பணத்தை சேமித்துக் கொள்ளுங்கள்” என்றார்.

நாட்டின் மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தபோதும், அமிதாப் பச்சன் 1990களில் திவால் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். 1980களில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய, அந்தக் காலத்தின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான ஜாக்கி ஷெராஃப் கூட 2000களின் தொடக்கத்தில் திவாலான நிலையை சந்தித்தார்.


முன்னாள் ஹிந்தி திரைப்பட சூப்பர் ஸ்டார்களான பகவான் தாதா மற்றும் பாரத் பூஷண் ஆகியோரும், ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவித்த பிறகு மிகவும் கடினமான காலங்களை எதிர்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தாய், கடற்கொள்ளையராக மிரட்டும் பிரியங்கா சோப்ரா.. எப்படி இருக்கிறது தி பிளஃப்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com