Share Market News Today: செயற்கை தொழில்நுட்பம் (ஏ.ஐ) அச்சுறுத்தலால் தகவல் தொழில்நுட்ப பங்குகள் சரிவை சந்தித்தன. இதற்கிடையில், சென்செக்ஸ் 1,069 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. நிப்டி 288 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது.
Share Market News Today: செயற்கை தொழில்நுட்பம் (ஏ.ஐ) அச்சுறுத்தலால் தகவல் தொழில்நுட்ப பங்குகள் சரிவை சந்தித்தன. இதற்கிடையில், சென்செக்ஸ் 1,069 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. நிப்டி 288 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது.

Published on: February 24, 2026 at 9:09 pm
மும்பை, பிப்.24, 2026: இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) 1.2% சரிந்தது. தகவல் தொழில்நுட்ப பங்குகள் கடுமையாக வீழ்ந்தன. இதனால், சென்செக்ஸ் 82,226-க்கு 1,069 புள்ளிகள் குறைந்தது; நிப்டி 25,425-க்கு 288 புள்ளிகள் சரிந்தது.
சென்செக்ஸ் தொகுப்பில் 30 நிறுவனங்களில் 22 பங்குகள் வீழ்ச்சி கண்டன. டெக் மகிந்திரா 6.6%, ஹெச்.சி.எல் டெக் 6.1%, எடெர்னல் (Eternal) 5.3% வீழ்ச்சி அடைந்தன. எனினும், என்.டி.பிசி (NTPC) 1.9%, ஹெச்.யூ.எல் 0.9% மற்றும் டாடா ஸ்டீல் பங்குகள் 0.5% உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் (பி.எஸ்.இ) 24 துறைகளில் 12 துறைகள் இழப்பைச் சந்தித்தன. அதில், தகவல் தொழில்நுட்பத் துறை துறை 4.8% வீழ்ச்சியுடன் மிக மோசமான நிலையைச் சந்தித்தது. மேலும் ரியல்டி 2.6% குறைந்தது. பவர், மெட்டல் மற்றும் நுகர்வோர் பயன்பாடு துறைகள் சிறிய அளவில் உயர்ந்தன.
அந்த வகையில், மொத்த சந்தை நிலை எதிர்மறையாக காணப்பட்டது. சுருங்கச்சொல்வதென்றால், 2,802 பங்குகள் வீழ்ச்சி, 1,422 பங்குகள் உயர்வு, 143 பங்குகள் நிலைத்த நிலையில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கி பங்குகள் இரண்டு நாளில் 17% சரிவு; கிளை மோசடி காரணமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com