Dr. Ramadoss: “தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி அனுமதி பெற்று நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், தலைவர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Dr. Ramadoss: “தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி அனுமதி பெற்று நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், தலைவர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published on: February 20, 2026 at 10:50 am
சென்னை பிப்ரவரி 20, 2026; பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்- தலைவர் மருத்துவர் ராமதாஸ் வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள நீர்வரத்து வாய்க்கால்கள், குளங்கள், தடுப்பணைகள், ஆறுகள், காவிரி டெல்டா மாவட்ட பாசன வாய்க்கால்கள் இப்போதே ஈரப்பதம் இன்றி வறண்டு விடும் நிலை ஏற்பட்டு விட்டது. ஜூன் மாதம் திறக்கப்படும் மேட்டூர் அணை தண்ணீர் கடைமடை வரை செல்ல வேண்டும் என்றால் இம்மாதமே தூர்வாரும் பணிகளை துவக்கிட வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், “தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள், வரத்து வாய்க்கால்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் உள்ளன. தூர்ந்து போகும் வாய்க்கால்கள், வடிகால்கள் பொதுப் பணித்துறை சார்பில் தூர்வாரப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் தூர்வாரும் பணிகளை தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்காமல், வேளாண் பொறியியல் துறையை கொண்டே செய்ய வேண்டும். அப்போதுதான் பணிகளில் தரம் இருக்கும். வடிகால் வாய்க்கால்களை வருவாய்த்துறையின் பதிவேட்டின்படி சர்வே செய்து பணிகள் தொடங்க வேண்டும். இதற்காக அந்தந்த பகுதி விவசாயிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க; தமிழக மீனவர்கள் 22 பேர் கைது.. படகுகள் பறிமுதல்!
தொடர்ந்து, “தூர்வார தேவையான நிதியை இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்டில்) ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அடுத்து வரும் அரசு நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்து, அதில் நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை துவக்குவதற்குள் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது.
எனவே தூர்வாரும் பணிகளை தாமதமின்றி மேற்கொள்ள தமிழக அரசு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி அனுமதி பெற்று நிதி ஒதுக்க வேண்டும். தேர்தல் ஆணையமும் இப்பணிக்கு விலக்களிக்க வேண்டும். தூர்வாரும் பணியை காலதாமதமின்றி உடனே தொடங்க வேண்டும்” எனவும் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க; திமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்த தேமுதிக.. தமிழக அரசியலில் பரபரப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com