Rajya Sabha Election: தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களில் 37 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் மார்ச் 16, 2026 அன்று நடைபெற உள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Rajya Sabha Election: தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களில் 37 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் மார்ச் 16, 2026 அன்று நடைபெற உள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Published on: February 18, 2026 at 1:01 pm
புதுடெல்லி, பிப்.18, 2026: தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களில் 37 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் மார்ச் 16, 2026 அன்று நடைபெற உள்ளது. இதற்கான வாக்குப்பதிவு நேரம் காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை ஆகும். இதில் பதிவான வாக்குகள், அதே நாளில் மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தல், மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களால் நடத்தப்படும் மறைமுகத் தேர்தலாகும்.
மாநிலங்கள் வாரியாக இடங்கள்
2026 ஏப்ரல் மாதத்தில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்கள் பின்வரும் மாநிலங்களில் உள்ளன.
மகாராஷ்டிரா – 7
ஒடிசா – 4
தமிழ்நாடு – 6
மேற்கு வங்காளம் – 5
அஸ்ஸாம் – 3
பீகார் – 5
சத்தீஸ்கர் – 2
ஹரியானா – 2
ஹிமாச்சலப் பிரதேசம் – 1
தெலுங்கானா – 2
ஒய்வு பெறும் முக்கிய உறுப்பினர்கள் யார்?
2026 ஏப்ரல் மாதத்தில் காலியாக உள்ள 37 இடங்களில், சில முக்கிய உறுப்பினர்கள் ஓய்வு பெற உள்ளனர். அவர்களில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவார், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்க்வி, திரிணமூல் காங்கிரஸ் மூத்தத் தலைவர் சாகேத் கோகலே, மாநிலங்கவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவார்கள்.
இதையும் படிங்க: குடும்பத்தோடு இந்தியா வாருங்கள் தாரிக் ரஹ்மான்.. பிரதமர் மோடி அழைப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com