CBDT: மத்திய நேரடி வரி வாரியம் (CBDT), வருமானவரி சட்டம் 2025-இன் கீழ் உருவாக்கப்பட உள்ள புதிய வருமானவரி விதிகள் மற்றும் படிவங்கள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பரிந்துரைகளை அழைத்துள்ளது.
CBDT: மத்திய நேரடி வரி வாரியம் (CBDT), வருமானவரி சட்டம் 2025-இன் கீழ் உருவாக்கப்பட உள்ள புதிய வருமானவரி விதிகள் மற்றும் படிவங்கள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பரிந்துரைகளை அழைத்துள்ளது.

Published on: February 9, 2026 at 5:28 pm
புதுடெல்லி, பிப்.9, 2026: மத்திய நேரடி வரி வாரியம் (CBDT), வருமானவரி சட்டம் 2025-இன் கீழ் புதிய வருமானவரி விதிகள் மற்றும் படிவங்கள் உருவாக்கப்பட்டன. இதுதொடர்பாக, பொதுமக்களிடமிருந்து பரிந்துரைகளை மத்திய நேரடி வரி வாரியம் (சி.பி.டி.டி) கோருகிறது.
இந்த அழைப்பு, வரி நிர்வாகத்தை மேலும் எளிமைப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், வரி செலுத்துவோரின் அனுபவத்தை மேம்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதாவது, வருமான வரிச் சட்டம், 2025 தொடர்பான முன்மொழியப்பட்ட வருமான வரி விதிகள் மற்றும் படிவங்கள் குறித்து பங்குதாரர்களிடமிருந்து பரிந்துரைகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
இதையும் படிங்க: ரூ.122 முதல் ஐ.பி.ஓ முதலீடு.. இந்த வார புதிய வரவுகள்.. முழு பார்வை!
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்ற வருமான வரிச் சட்டம், இந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில், இறுதி அறிவிப்புக்கு முன்னதாக, முன்மொழியப்பட்ட வருமான வரி விதிகள் மற்றும் படிவங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான incometaxindia.gov.in இல் பதிவேற்றப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில், மொழியை எளிமைப்படுத்துதல், குறைகளைக் குறைத்தல், இணக்கச் சுமையைக் குறைத்தல் மற்றும் தேவையற்ற அல்லது காலாவதியான விதிகள் மற்றும் படிவங்களை அடையாளம் காண்பது குறித்து உள்ளீடுகள் கோரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வரி சேமிப்பு, வருமானம் உயர்வு.. டாப் 5 ELSS மியூச்சுவல் ஃபண்ட்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com