Devendra Fadnavis: “நக்சல் பாதிக்கப்பட்ட கட்சிரோலி மாவட்டம் இந்தியாவின் பசுமை எஃகு மையமாக உருவாக்கப்படும் என மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்துள்ளார்.
Devendra Fadnavis: “நக்சல் பாதிக்கப்பட்ட கட்சிரோலி மாவட்டம் இந்தியாவின் பசுமை எஃகு மையமாக உருவாக்கப்படும் என மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்துள்ளார்.

Published on: February 7, 2026 at 11:54 am
மும்பை, பிப்.7, 2026: மகாராஷ்டிரா மாநிலத்தில் நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட கட்சிரோலி மாவட்டம், இந்தியாவின் பசுமை எஃகு மையமாக மாற்றப்படும் என அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் தொழில்துறை வளர்ச்சியையும் ஒருங்கிணைக்கும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது. மேலும், இந்தத் திட்டத்தின் நோக்கம் சுற்றுச்சூழல் நட்பு தொழில்துறை வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் உருவாக்கம் மற்றும் பிராந்திய முன்னேற்றம் ஆகும்.
இதையும் படிங்க: பஜாஜ் ஃபின்சர்வ் Q3 FY26 லாபம் சரிவு.. வருமானம் எப்படி?
ராஷ்ட்ரசந்த் துக்டோஜி மகாராஜ் நாக்பூர் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தேவேந்திர பட்னாவிஸ் இதனை தெரிவித்தார். அப்போது இந்த பசுமை எஃகு திட்டம் குறித்து பேசிய பட்னாவிஸ், “சீனாவை விட குறைந்த செலவில் எஃகு உற்பத்தி செய்ய முடியும் என்றும் உலக சந்தைகளுக்கு விநியோகம் செய்யலாம் என்றும் கூறினார். இந்தத் திட்டத்தின் நோக்கம், பிராந்திய வளர்ச்சியை வேகப்படுத்தும் தொழில்துறை மையங்களை உருவாக்குதல் ஆகும்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர், இந்தியாவின் மிகப்பெரிய சோலார் மாட்யூல் உற்பத்தி மையமாக உருவெடுத்து வருகிறது; சுமார் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், அம்ராவதி அருகே இரண்டாவது பிரதம மந்திரி நெசவு பூங்கா மற்றும் புதிய விமானப் பள்ளி திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓய்வூதிய திருத்தம்.. 47 ஆயிரம் ஊழியர்கள் பயன்.. 30% உயர்வு.. சூப்பர் அறிவிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com