என் மகன் நிரபராதி.. யார் அந்த பெரிய இடம்? கோயில் காவலாளி அஜித் குமாரின் தாயார் கண்ணீர்!

Ajith Kumars Lock Up Death Case: “என் மகன் நிரபராதி; நீதிமன்றம் இதனை தெளிவுபடுத்தி உள்ளது. ஒன்றுமே இல்லாத புகாரில் எனது மகன் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்”என கோயில் காவலாளி அஜித் குமாரின் தாயார் கூறினார்.

Published on: February 5, 2026 at 3:20 pm

மதுரை பிப்ரவரி 5, 2026; சிவகங்கை அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் 27 வயதான அஜித்குமார். இவரை வழக்கு ஒன்றில் விசாரித்த போலீசார், அடித்தே கொன்றனர். இந்த வழக்கு தற்போது சிபிஐ வசம் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் புகார் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி அளிக்கப்பட்டு இருந்தது; இந்த நிலையில் போலீசாரின் தாக்குதலில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு அஜித் குமார் ஜூன் 28ஆம் தேதி மரணமடைந்தார்.

தற்போது இது லாக்கப் டெத் தான் என அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. நிகிதா என்ற பெண் தனது நகைகளை காணவில்லை என்று அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அஜித்குமாரிடம் விசாரணை நடத்தினார்கள். அஜித்குமாரின் உடல் கூராய்வு அறிக்கையில் அவரது உடம்பில் 44 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க; தமிழ்நாட்டில் வலிமையான காங்கிரஸ்.. 18 எம்எல்ஏ, 9 எம்பிக்கள்.. பட்டியலிட்ட செல்வப்பருந்தகை!

மேலும் அஜித் குமார் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ காட்சிகளும் வெளியாகின; இது நாடு முழுக்க பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் கோயில் காவலாளி அஜித் குமார் லாக்கப் டெத் செய்யப்பட்டுள்ளார் என்பதை சிபிஐ தனது விசாரணை அறிக்கை மூலம் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு இதுவரை ஜாமின் வழங்கப்படவில்லை.

அஜித் குமாரின் தாயார் மாலதி பேட்டி

இந்த நிலையில் அஜித்குமாரின் தாயார் மாலதி, “எனது மகன் அஜித்குமார் குற்றவாளி இல்லை என நீதிமன்றம் கூறியுள்ளது; ஒன்றுமே இல்லாத புகாரில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்”என்றார். மேலும் யார் அந்த பெரிய இடம் எனவும் அஜித் குமாரின் தாயார் மாலதி கேள்வி எழுப்பினார்.

யார் அந்த பெரிய இடம்?

தொடர்ந்து பேசிய கோயில் காவலாளி அஜித் குமாரின் தாயார் மாலதி, “இந்த வழக்கில் நிகிதா என்பவர் பொய் புகார் அளித்துள்ளார்; யார் சொல்லி அவர் இந்த பொய் புகாரை அளித்தார். இந்த வழக்கை விசாரணை செய்த போலீசார் பெரிய இடத்திலிருந்து உத்தரவு வந்ததினால் தான் நாங்கள் விசாரணை செய்தோம் என ஐந்து பேரும் தெரிவித்துள்ளனர். அப்படி என்றால் அந்தப் பெரிய இடம் என்பது யார்? எனவும் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க; கமல்ஹாசன் உரையை லட்சோப லட்ச மக்கள் புகழ்கிறார்கள்.. கவிஞர் சிநேகன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com