காங்கிரசுக்கு 12 சதவீத வாக்கு.. அதிமுகவை த.வெ.க வெல்லும்.. பிரவீன் சக்கரவர்த்தி

Praveen Chakravarthy: தமிழக காங்கிரசுக்கு 12 சதவீத வாக்கு வங்கி இருப்பதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்; கடந்த மாதம் திமுக காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய வரும் இவர்தான்.

Published on: February 4, 2026 at 10:01 pm

சென்னை பிப்ரவரி 4 2026; காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான பிரவீன் சக்கரவர்த்தி, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு 12 சதவீத வாக்கு வங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய பிரவீன் சக்கரவர்த்தி, “கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி காரணமாக பலவீனம் அடைந்து விட்டது; காங்கிரஸ் கட்சியை பொருத்தமட்டில் தமிழ்நாட்டில் 12 சதவீத வாக்கு வங்கி உள்ளது. கட்சி பலமாக இருந்தால்தான் கூட்டணியும் பலமாக இருக்கும்.”என தெரிவித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

மேலும் காங்கிரஸ் கட்சிக்கு 12 சதவீத வாக்கு வங்கி இருக்கிறது என்பதை தெரிவித்துள்ள பிரவீன் சக்கரவர்த்தி பிரித்துப் பார்த்தால்தான் காங்கிரஸின் உண்மையான மதிப்பு தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகம் குறித்து..

தமிழக வெற்றி கழகம் குறித்து கருத்து பதிவிட்டுள்ள பிரவீன் சக்கரவர்த்தி,”விஜய்க்கு வீட்டுக்கு ஒரு ஓட்டு என்ற பேச்சு இருக்கிறது. அந்தக் கட்சியை பொருத்தமட்டில் அதன் வளர்ச்சி என்பது ஊரறிந்த விஷயமாக காணப்படுகிறது.

தமிழக மக்களை பொருத்தமட்டில் அவர்கள் விஜயை ஆதரிக்கிறார்கள்; இதனை எனது ஆய்வுகள் மூலமாகவே நான் கண்டுள்ளேன். தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் அதிமுகவை விஜய் பின்னுக்குத் தள்ளுவார்; இந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை விட தமிழக வெற்றிக்கழகம் அதிகபடியான வாக்குகளை வெல்லும்” என்றார்.

இதையும் படிங்க: நடிகர் விஜய்யின் த.வெ.க.வுக்கு திமுக மிரட்டல்.. அருண் ராஜ்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com