சென்னை, பிப்ரவரி 2.2026; 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உறுதிப்படுத்த தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தல்
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற பொது தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ளது; இந்த தேர்தலில் இழந்த ஆட்சியை மீட்க அதிமுக உறுதி பூண்டுள்ளது. அதே நேரம், ஆட்சியைத் தக்க வைக்க மு.க ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார்.
கடந்த கால கூட்டணி அப்படியே தொடர வேண்டும் என்பதில் மு.க ஸ்டாலின் உறுதியாகவும் உள்ளார். திமுகவை பொருத்தமட்டில், காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணி தொடர வேண்டும் என விரும்புகிறது.
இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய வைகோ, ” திமுக நிச்சயமாக தனி பெரும்பான்மை பெறும்; 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மு.க ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் ஆக பதவியேற்பார்” என்றார்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு?
இதைத்தொடர்ந்து, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் கோரிக்கை குறித்து பேசிய வைகோ, ” ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை நாங்கள் வைக்கவில்லை; அப்படி ஒரு கோரிக்கை வைக்க வேண்டிய நோக்கமும் இல்லை” என்றார்.
இதையும் படிங்க; தி.மு.க.வை திருப்திப்படுத்த.. அரைவேக்காடு.. திருமாவை கண்டித்த டி.டி.வி
Mandaadi Box Office Collections : நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் ரூ.80 கோடிக்கும் மேல் வசூலித்து தியேட்டர்களில் சிறப்பாக ஓடிவருகிறது….
Special Train Services: திருவனந்தபுரம்–தாம்பரம் சிறப்பு ரயில்கள் சேவை காலம் நீட்டித்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது….
Nestle: குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பொருட்கள் விவகாரத்தில் Nestle மீது FSSAI 3 வழக்குகள் செய்துள்ளது….
TVS Apache: TVS Apache, Ronin பைக்குகளில் புதிய அப்டேட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன; பண்டிகை காலத்தை முன்னிட்டு டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது….
India Faces 100% Tariff Threat : இந்தியாவுக்கு 100% வரி விதிக்க டிரம்புக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு…
Jos Buttler: டி20 கிரிக்கெட்டில் 15,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ஜோஸ் பட்லர் படைத்துள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்