Congress: 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் காங்கிரசுக்கு அமைச்சரவையில் இடம் இல்லை என்பதில் உறுதியாக உள்ள திமுக, அக்கட்சியுடன் கூட்டணியை இறுதிப் படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Congress: 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் காங்கிரசுக்கு அமைச்சரவையில் இடம் இல்லை என்பதில் உறுதியாக உள்ள திமுக, அக்கட்சியுடன் கூட்டணியை இறுதிப் படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Published on: January 30, 2026 at 12:18 pm
Updated on: January 30, 2026 at 1:14 pm
சென்னை ஜனவரி 30 2026; தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது; இந்த தேர்தலில் இழந்த ஆட்சியை மீட்க அதிமுக உறுதியாக உள்ளது. அதேநேரம் ஆட்சியை மீண்டும் தொடர்வதற்கு தன் வசமுள்ள எந்த ஒரு கூட்டணி கட்சியும் வெளியேறிவிடக்கூடாது என்பதில் திமுக சிறப்பு கவனம் செலுத்துகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில், ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. இது திமுகவினரை சற்று அதிர்ச்சி அடைய செய்தது.
பல இடங்களில் திமுகவுடன் கூட்டணி வேண்டாம் என அக்கட்சியினர் கூறினார்கள்; மறுபுறம் காங்கிரசாரும் திமுகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு காங்கிரஸ் கட்சி நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்துடன் இணைய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், காங்கிரஸ் தொண்டர்களின் கூற்றுக்களை நிராகரித்த கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ, யார் அப்படி பேசினார்கள்? திமுக காங்கிரஸ் கூட்டணி இரும்பு கோட்டை போல் வலுவாக உள்ளது; காங்கிரஸ் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் என்பது தொடர்பாக டெல்லி மேல் மட்ட தலைவர்கள் அதிகாரப்பூர்வமாக கூறுவார்கள். அதுவரை இது போன்ற கூற்றுக்களை நம்ப வேண்டாம் என தெரிவித்தார்.
இதற்கிடையில் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு அளிக்க முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு விருப்பம் இல்லை என அக்கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான பெரியசாமி ஒரு மீட்டிங்கில் பேசினார்.
மூத்த அமைச்சர் ஐ பெரியசாமியின் இந்த பேச்சுக்கள் காங்கிரஸ் கட்சிக்கு பதில் அளிப்பதாகவே காணப்பட்டது; இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி குறித்து சில கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க; இனி எக்காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது.. திமுகவை விமர்சித்த டிடிவி!
இந்த கருத்துக்கள் திமுகவினருக்கு பிடிக்கவில்லை; இந்த நிலையில் மதுரை திமுக எம்எல்ஏ தளபதி காங்கிரஸ் கட்சிக்கு மாநிலம் முழுவதும் தொகுதிக்கு 3000 முதல் 4000 வாக்குகள் மட்டுமே உள்ளன; அந்தக் கட்சியால் பூத் ஏஜெண்டுகளை கூட போட முடியாது என கூறினார். இதைத்தொடர்ந்து திமுக காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் சலசலப்புகள் ஏற்பட்டன. இந்த சலசலப்புகளை தீர்க்கும் விதமாக திமுகவின் மூத்த தலைவர் ஆர்.எஸ் பாரதி, திமுக தொண்டர்கள் வெற்றியில் கவனம் செலுத்த வேண்டும்; மாறாக பொதுவெளியில் கூட்டணி தொடர்பாக எதையும் பேசக்கூடாது என தெரிவித்திருந்தார்.
இந்த சலசலப்புக்கு மத்தியில் புதுடில்லியில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து திமுக காங்கிரஸ் கூட்டணியை இறுதிப்படுத்தி உள்ளார் கனிமொழி எனக் கூறப்படுகிறது.
இந்த கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றாலும் காங்கிரசுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படாது என்ற தகவலும் வெளியாகி உள்ளது. ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என கோரிக்கை விடுத்த காங்கிரஸ் கட்சியை, கூட்டணியில் திமுக இணைத்துக் கொண்டது, திமுகவின் அரசியல் ராஜதந்திர நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க; பொதுவெளியில் கூட்டணி விவாதம் கூடாது.. தி.மு.க.வினருக்கு ஆர்.எஸ் பாரதி உத்தரவு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com