மு.க ஸ்டாலினை சந்தித்த மாணிக்கராஜா.. கட்சியை விட்டு நீக்கிய டி.டி.வி தினகரன்!

Manickaraja: தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை மாணிக்கராஜா சந்தித்த நிலையில் அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

Published on: January 23, 2026 at 12:39 pm

சென்னை ஜனவரி 23, 2026; டிடிவி தினகரன் தலைமையிலான, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகளில் ஒருவராக திகழ்ந்தவர் மாணிக்கராஜா. இவர் தற்போது, அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். தமிழக முதலமைச்சர் MK ஸ்டாலினை சந்தித்து, இவர் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அப்போது அமைச்சர் கீதா ஜீவன் உடன் இருந்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கராஜா, ” டிடிவி தினகரன் தங்களை ஆலோசிக்காமல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து கொண்டார்; அப்படி என்ன அழுத்தம் ஏற்பட்டது” என பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பியிருந்தார்.

மாணிக்கராஜா நீக்கம்

இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து மாணிக்க ராஜாவை நீக்கி அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளார் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக கருதப்பட்ட மாணிக்க ராஜாவை நீக்கி டி வி தினகரன் உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க; மக்கள் நீதி மையம் செயற்குழு கூட்டம்.. நாளை நடைபெற உள்ளது!

பாகிஸ்தானுக்கு சுற்றுலா சென்ற 9 வயது சிறுமி சுட்டுக்கொலை.. தவறுதலாக சுட்டதாக போலீஸ்காரர் வாக்குமூலம்!
Australian Girl Killed in Pakistan

பாகிஸ்தானுக்கு சுற்றுலா சென்ற 9 வயது சிறுமி சுட்டுக்கொலை.. தவறுதலாக சுட்டதாக போலீஸ்காரர்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com