Mana Shankara Varaprasad Garu : நடிகர் சீரஞ்சிவியின், மண சங்கர வர பிரசாத் காரு திரைப்படத்தின் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன.
Mana Shankara Varaprasad Garu : நடிகர் சீரஞ்சிவியின், மண சங்கர வர பிரசாத் காரு திரைப்படத்தின் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன.

Published on: January 20, 2026 at 6:04 pm
ஹைதராபாத், ஜன.20, 2026: நடிகர் சிரஞ்சீவியின் ‘மண சங்கர வரபிரசாத் காரு’ படம் தெலுங்கு சினிமாவுக்கு புதிய உயிர் ஊட்டியதாக அவரது ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.
இந்தப் படம், பழைய சிரஞ்சீவி மீண்டும் திரைக்கு வந்ததை குறிக்கிறது என்பதோடு, பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளையும் முறியடித்துள்ளது.
இப்படம் வெளியீட்டின் முதல் வாரத்தில் இந்தியாவில் மட்டும் ₹157.75 கோடி நெட் வசூல் செய்துள்ளதுடன், உலகளவில் ₹225 கோடி கிராஸ் வசூலை பெற்றுள்ளது. தயாரிப்பாளர்கள் கூறியதன்படி, கடந்த 8 நாள்களில் இந்த படம் உலகளவில் ₹300 கோடி வசூலை கடந்துள்ளது.
பாக்ஸ் ஆபீஸ் வசூல்
சிரஞ்சீவியின் ‘மண சங்கர வரபிரசாத் காரு’ படம் சங்கராந்தி பண்டிகை காலத்தில் மிகச் சிறப்பாக ஓடியது. பண்டிகைக்குப் பிறகு திங்கட்கிழமை முதல் தேக்கத்தை சந்தித்தபோதும், 45% குறைவுடன் ₹9 கோடி நெட் வசூலை இந்தியாவில் பெற்றது.
இந்நிலையில், கடந்த எட்டு நாட்களில், இந்தப் படத்தின் இந்திய நெட் வசூல் ₹167 கோடியாக (₹200 கோடி கிராஸ்) உயர்ந்துள்ளது.
வெளிநாடுகளில், திங்கட்கிழமை வலுவான தொடக்கத்திற்குப் பிறகு வசூல் மந்தமானாலும், $4.5 மில்லியன் டாலருக்கு மேல் ஈட்டியுள்ளது. இதனால் உலகளாவிய கிராஸ் வசூல் ₹240 கோடிக்கு அருகில் சென்றுள்ளது.
தயாரிப்பாளர்கள் கூறியதன்படி, படம் ஏற்கனவே ₹300 கோடி கிராஸ் வசூலை கடந்துவிட்டது. இதனால், 2026-இல் பாக்ஸ் ஆபிஸில் ₹300 கோடி வசூலை கடந்த முதல் இந்திய திரைப்படமாக ‘மண சங்கர வரபிரசாத் காரு’ அமைந்துள்ளது.
இதையும் படிங்க: துரந்தர் பட ஸ்டார்.. நடிகை சாரா அர்ஜூனுக்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com