Disha Patani: நடிகர் சூர்யா பட நடிகை, பஞ்சாப் பாடகர் ஒருவருடன் டேட்டிங்கில் ஈடுபட்டார் என்ற கிசுகிசு வெளியாகியுள்ளது.
Disha Patani: நடிகர் சூர்யா பட நடிகை, பஞ்சாப் பாடகர் ஒருவருடன் டேட்டிங்கில் ஈடுபட்டார் என்ற கிசுகிசு வெளியாகியுள்ளது.

Published on: January 14, 2026 at 2:10 pm
மும்பை, ஜன.14, 2026: தமிழில் நடிகர் சூர்யா உடன் படம் ஒன்றில் நடித்தவர் திஷா பதானி. இவர், பஞ்சாப் பாடகர் ஒருவருடன் டேட்டிங்கில் இருப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட் நடிகை திஷா படானி, பஞ்சாபி பாடகர் தல்விந்தருடன் காதலில் இருப்பதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.
சமீபத்தில், திஷா படானி, உதய்ப்பூரில் நடைபெற்ற கிரிதி சனோனின் சகோதரி நுபூர் சனோன் – பாடகர் ஸ்டெபின் பென் திருமண விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவில் எடுக்கப்பட்ட பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில், திஷா மற்றும் தல்விந்தர் கைகோர்த்து, மௌனி ராய் கணவர் சுரஜ் நம்பியாருடன் உரையாடும் காட்சி பெரும் கவனம் பெற்றுள்ளது.
பின்னர், உதய்ப்பூர் விமான நிலையத்தில், இருவரும் ஒன்றாக மும்பைக்கு புறப்பட்ட காட்சியும் பதிவாகியுள்ளது. முகத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதற்காக பிரபலமான தல்விந்தர், அப்போது முகக்கவசம் அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உடல் பருமன் போராட்டம்.. அமீர் கான் மகளுக்கு இப்படி ஓர் பிரச்னையா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com