Karthi: நடிகர் கார்த்தியின் வாத்தியார் திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Karthi: நடிகர் கார்த்தியின் வாத்தியார் திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published on: January 12, 2026 at 5:52 pm
சென்னை ஜனவரி 12, 2026: நலம் குமாரசாமி இயக்கத்தில் கே.இ ஞானவேல் தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள படம் வாத்தியார். கார்த்தியின் 26 ஆவது படமாக உருவாகியுள்ள திரைப்படம் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது.
இந்த திரைப்படத்தில் கார்த்தி உடன், நடிகை கீர்த்தி செட்டி, நடிகர் சத்யராஜ், ஆனந்தராஜ், ராஜ்கிரண், நடிகை ஷில்பா மஞ்சுநாத், நடிகர் கருணாகரன், ஜி.எம் சுந்தர், ரமேஷ் திலக், நிவாஸ் ஆதித்தன் மற்றும் பி.எல் தேனப்பன் என பல நட்சத்திரங்கள் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்தில் கார்த்தி டிஎஸ்பி ராமேஸ்வரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம், பொங்கல் வெளியீடாக ஜனவரி 14-ஆம் தேதி 2026 திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் தள்ளிப்போன நிலையில் கார்த்தியின் வா வாத்தியார், பொங்கலுக்கு வரிஞ்சு கட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; பணத்தை குவித்த பராசக்தி.. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com