Congress: சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ( ஜனவரி 11, 2026) உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Congress: சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ( ஜனவரி 11, 2026) உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Published on: January 12, 2026 at 11:10 am
Updated on: January 12, 2026 at 11:11 am
சென்னை ஜனவரி 12, 2026: சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ( ஜனவரி 11, 2026)உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்; இதே போல் தொடர்ந்து 45 நாட்கள் போராட்டங்கள் நடத்தவும் காங்கிரஸ் கட்சி சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்?
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை அண்மையில் பாரதிய ஜனதா அரசாங்கம் மாற்றியது. இந்தத் திட்டத்தின் பெயர் தற்போது, தீக்ஷித் பாரத் ஜி ராம் ஜி, என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா தாக்கல் செய்தபோது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
அப்போது, காணொளி வாயிலாக செய்தி ஒன்றை வெளியிட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மகாத்மா காந்தி பெயரிலான திட்டத்தை மாற்றி அமைத்தது குறித்து, எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெறும்” என்றார்.
மேலும் இதனை கருப்பு தினம் என்றும் வர்ணித்த சோனியா காந்தி, ஜனநாயகத்தின் மீதான புல்டோசர் தாக்குதல் எனவும் விமர்சித்தார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று சென்னை எழும்பூரில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை, மாற்றி அமைத்ததற்கு எதிராக அடுத்த 45 நாட்கள் போராட்டம் நடத்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க; கரூரை விட விஜய்க்கு டெல்லியில் பாதுகாப்பு.. வானதி சீனிவாசன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com