Nainar Nagendran: தமிழக அமைச்சரவையில் பங்கு என அதிமுகவுக்கு அழுத்தம் கொடுப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ளார் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன்.
Nainar Nagendran: தமிழக அமைச்சரவையில் பங்கு என அதிமுகவுக்கு அழுத்தம் கொடுப்பதாக வெளியான தகவலை மறுத்துள்ளார் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன்.

Published on: January 10, 2026 at 6:35 pm
சென்னை ஜனவரி 10, 2026: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், வெற்றி பெறும் வகையில் அரசியல் கட்சிகள் இப்போது தங்களது வியூகங்களை அமைத்து வருகின்றன. ஆளுங்கட்சியான திமுகவை பொருத்தமட்டில் தங்களது கூட்டணியில் உள்ள எந்த ஒரு கட்சியும் வெளியேறி விடக்கூடாது என்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள், திமுக கூட்டணியில் தொடர வேண்டும் என அக்கட்சியின் தலைவர் விரும்புவதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் அதிமுக பாஜக இடையே கூட்டணி ஏற்பட்டது; முன்னதாக நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவர் ஆன விஜய், தனது அரசியல் பொதுக்கூட்டத்தில் பேசும்போது தனது கூட்டணிக்கு வரும் அரசியல் கட்சிகளுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு அளிப்பதாக கூறினார்.
இதையும் படிங்க: ஜனநாயகன் பேனர் விழுந்து ஓய்வு ஊழியர் காயம்.. மூன்று பேர் கைது!
இந்த நிலையில் தமிழக அமைச்சர் அவையில் பங்கு என அதிமுகவுக்கு பாரதிய ஜனதா அழுத்தம் கொடுப்பதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், ” நாங்கள் இதுவரைக்கும் அந்த மாதிரியான எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை” என்றார். மேலும் தேமுதிகவுடன் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறதா என்ற கேள்விக்கு, ” தேமுதிகவுடன் இதுவரை பேச்சு வார்த்தைகள் நடைபெறவில்லை; ஒவ்வொரு கட்சியாக எங்களது கூட்டணிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். முதலில் அன்புமணி வந்தார்; தை பிறந்தால் வழி பிறக்கும்” என்றார்.
இதையும் படிங்க: தனித்து நிற்க வீரமும் துணிவும் தேவை.. நாம் தமிழர் சீமான்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com