Director Mari Selvaraj: நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஆதரவாக தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
Director Mari Selvaraj: நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஆதரவாக தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

Published on: January 10, 2026 at 4:06 pm
சென்னை ஜனவரி 10, 2026: பொங்கலுக்கு முன்பாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜயின் ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி உள்ளிட்ட படங்களுக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் படங்கள் தணிக்கை சான்றிதழ் பெறுவதில் சிக்கல் நீடிப்பதாக கூறப்படுகிறது.
படத்தில் உள்ள ஆட்சேபயத்துக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என தணிக்கை வாரியம் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் ஜனநாயகன்படத்திற்கு ஆதரவாக இயக்குனர் மாரி செல்வராஜ் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், “ஜனநாயகன் திரைப்படத்தின் மீது நமது தணிக்கை துறை நிகழ்த்தி இருப்பது அப்பட்டமான அநீதி தான்; ஒரு படைப்பாளி என்ற முறையில், இந்த அநீதியை எதிர்ப்பதன் மூலம், நம் ஜனநாயகத்தின் மீதும் நமது படைப்பு சுதந்திரத்தின் மீதும் வேகமாக படரும் பேரெச்சத்தை, துடைத்தெறிய பெருங்குரல் எழுப்புவோம்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க; நான் இயக்கிய திரைப்படங்களுக்கும் நெருக்கடி.. பா. ரஞ்சித்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com