New Year 2026: பிரதமர் நரேந்திர மோடி, விடுத்துள்ள 2026 புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், “இந்த புத்தாண்டு செழிப்பு, வளர்ச்சி மற்றும் வெற்றியை கொடுக்கட்டும் எனத் தெரிவித்துள்ளார்.
New Year 2026: பிரதமர் நரேந்திர மோடி, விடுத்துள்ள 2026 புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், “இந்த புத்தாண்டு செழிப்பு, வளர்ச்சி மற்றும் வெற்றியை கொடுக்கட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Published on: January 1, 2026 at 11:23 am
புதுடெல்லி, ஜன.1, 2026: ஜனாதிபதி திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “புதிய ஆண்டு புதுப்பித்த ஆற்றல் மற்றும் நேர்மறையான மாற்றத்தின் அடையாளம். இது சுயபரிசீலனைக்கும் புதிய தீர்மானங்களுக்கும் ஒரு வாய்ப்பாகும். நாட்டின் முன்னேற்றம், சமூக ஒற்றுமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அனைவரும் தங்கள் அர்ப்பணிப்பை வலுப்படுத்த வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன்
துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “புதிய ஆண்டு அனைவருக்கும் அமைதி, நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை தர வேண்டும். வலுவான, முன்னேற்றமான இந்தியாவை உருவாக்கும் உறுதியை மேலும் வலுப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “புதிய ஆண்டு அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், செழிப்பு, வெற்றி மற்றும் நிறைவேற்றத்தை தர வேண்டும்” என வாழ்த்தியுள்ளார். மேலும், “ சமூகத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சி நிலைக்க பிரார்த்திக்கிறேன்” எனவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : புத்தாண்டு கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதி.. 150 கிலோ வெடிபொருள்.. இருவர் கைது!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com