C P Radhakrishnan: இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இன்று (டிச.29, 2025) ஒருநாள் பயணமாக புதுச்சேரி வருகிறார்.
C P Radhakrishnan: இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இன்று (டிச.29, 2025) ஒருநாள் பயணமாக புதுச்சேரி வருகிறார்.

Published on: December 29, 2025 at 11:53 am
புதுடெல்லி, டிச.29, 2025: இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இன்று (திங்கள்கிழமை) ஒருநாள் பயணமாக புதுச்சேரி வருகிறார். இவர், தனது பயணத்தின் போது, ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டத்தின் கீழ் வீடமைப்பு திட்டத்தை தொடங்கி, கம்பன் கலையரங்கத்தில் பயனாளிகளுக்கு ஐந்து குடியிருப்புகளின் சாவிகளை வழங்க உள்ளார்.
பின்னர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் சிலையை ஈஸ்வரன் கோயில் தெருவிலுள்ள பாரதியார் நினைவிடத்தில் திறந்து வைக்கிறார். துணை ஜனாதிபதி, குமரகுரு பல்லம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி மிஷன் வீடமைப்பு திட்ட பயனாளர்களுடன் கலந்துரையாடி, மூலக்குளத்தில் உள்ள பெட்டிட் செமினார் பள்ளியின் மூத்த நிலை பிரிவை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து, மதியம், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 30வது பட்டமளிப்பு விழாவில் தலைமை தாங்கி பட்டம் வழஙகுகிறார். பின்னர், புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் புறப்பட்டு, அங்குள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : டெல்லியில் கடும் பனிமூட்டம்.. விமான சேவை பாதிப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com