Delhi airport issue: டெல்லியில் இன்று (திங்கள்கிழமை) கடும் பனிமூட்டம் நிலவியது; இதனால் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
Delhi airport issue: டெல்லியில் இன்று (திங்கள்கிழமை) கடும் பனிமூட்டம் நிலவியது; இதனால் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

Published on: December 29, 2025 at 10:52 am
புதுடெல்லி, டிச.29, 2025: டெல்லி மற்றும் நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மற்றும் பல விமான நிறுவனங்கள் பயண அறிவிப்புகளை திருத்தி வெளியிட்டுள்ளன.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், தலைநகரை மூடியுள்ள பனிமூட்டத்தை முன்னிட்டு பயண அறிவிப்பை வெளியிட்டு, பயணிகள் தங்களது விமான நிறுவனங்களைத் தொடர்புகொண்டு புதுப்பிக்கப்பட்ட விமான தகவல்களை அறியுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், ஏர் இந்தியா புதிய பயண அறிவிப்பை வெளியிட்டு, கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க : 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கம்.. காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு!
மேலும், எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றாலும், எதிர்பாராத தாமதங்கள், மாற்றுப்பாதைகள் அல்லது ரத்துசெய்தல் நிகழ வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஸ்பைஸ் ஜெட் தனது சமீபத்திய அறிவிப்பில், டெல்லியில் இருந்து புறப்படும் மற்றும் டெல்லிக்கு வரும் அனைத்து விமானங்களும், அதனுடன் தொடர்புடைய சேவைகளும் குறைந்த பார்வைத்திறன் காரணமாக பாதிக்கப்படக்கூடும் என தெரிவித்துள்ளது. பயணிகள் தங்களது விமான நிலையை தொடர்ந்து சரிபார்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க : உலகின் சேவை துறையில் முன்னணி நாடு இந்தியா.. மாநிலங்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com