G.K. Mani: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசை அவமானப்படுத்துவதற்கு சமம் என ஆதங்கப்பட்டுள்ளார் அக்கட்சியின் கௌரவ தலைவர் ஜி கே மணி.
G.K. Mani: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசை அவமானப்படுத்துவதற்கு சமம் என ஆதங்கப்பட்டுள்ளார் அக்கட்சியின் கௌரவ தலைவர் ஜி கே மணி.

Published on: December 26, 2025 at 11:26 pm
சென்னை டிசம்பர் 26 2025; பாட்டாளி மக்கள் கட்சியில் அண்மைக்காலமாக உட்கட்சிப் பிரச்சனை மிகப்பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பாமகவின் தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நீக்கப்பட்டார்.
கட்சியின் கொடியோ பெயரையோ பயன்படுத்தக் கூடாது என்றும் ராமதாஸ் எச்சரித்து இருந்தார். இந்த நிலையில் தாம் சட்டப்படி கட்சியின் தலைவராக தொடர்வதாக அன்புமணி ராமதாஸ் பதில் கொடுத்திருந்தார். இந்த பிரச்சனை நாளுக்கு நாள் மிகப்பெரிய அளவில் உருவெடுத்து வருகிறது.
இந்த நிலையில் இன்று ( டிசம்பர் 26, 2025) பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து ராமதாஸின் ஆதரவாளரும் கௌரவ தலைவருமான ஜி கே மணி அதிரடியாக அன்புமணி ராமதாஸ் நீக்கப்பட்டார்.
இதற்கு பதில் அளித்த ராமதாஸின் ஆதரவு எம்எல்ஏ அருள்,” இது போன்ற செயல்களில் ஈடுபட அன்புமணி ராமதாஸுக்கு எந்த அதிகாரமும் இல்லை” என்றார்.
ஜிகே மணி ஆதங்கம்
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜிகே மணி,” ராமதாஸ் ஏற்கனவே கட்சியின் பெயரையோ கட்சிக் கொடியையோ அன்புமணி ராமதாஸ் பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துவிட்டார்.
ஆனால் அதன் பின்னரும், அவருடன் இருப்பவர்களை கொச்சைப்படுத்துவது ராமதாசை அவமானப்படுத்துவதற்கு சமம்” என்று ஆதங்கப்பட்டார்.
இதையும் படிங்க; மார்கழி மக்கள் இசை மாற்று அரசியல் மேடை.. கனிமொழி பரபரப்பு பேச்சு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.




© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com