Khushbu: 2026 சட்டமன்ற தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிடப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு நடிகை குஷ்பு பதிலளித்தார்.
Khushbu: 2026 சட்டமன்ற தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிடப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு நடிகை குஷ்பு பதிலளித்தார்.

Published on: December 26, 2025 at 3:47 pm
சென்னை, டிச.26, 2025: தமிழ்நாட்டில் 2026 ஏப்ரல்- மே மாதங்களில் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் தங்களின் பரப்புரைகளை தற்போதே தொடங்கிவிட்டன. இந்த நிலையில், சென்னையில் நடிகை குஷ்புவிடம் 2026 சட்டமன்ற தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிடப் போகிறீர்கள் என கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், “2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போகிறேனா? இல்லையா? என்பது குறித்து எனக்கு தெரியாது. பாரதிய ஜனதா கட்சியில் துணை தலைவராக இருந்தாலும், என்னைப் பொறுத்தவரை நான் சாதாரண காரியகர்த்தா என்றுதான் கூறுவேன்” என்றார்.
வெற்றிக்கு உழைப்பேன்
தொடர்ந்துப் பேசிய நடிகை குஷ்பு, “2026 சட்டமன்ற தேர்தலில் எந்தத் தொகுதியாக இருந்தாலும், நாங்கள் வெற்றிப் பெற வேண்டும். அதற்காக நான் உழைப்பேன். தொகுதியை பொறுத்தமட்டில் யார் நின்றாலும் அவரின் வெற்றிக்காக உழைப்பேன்” என்றார்.
கூட்டணி
2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியும், அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியும் தேர்தலை சந்திக்கின்றன. அதேபோல், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன. பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளின் முடிவுகள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. இந்தக் கட்சிகளில் ஜனவரியில் கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடும் எனத் தெரிகிறது.
குஷ்பு அரசியல்
முன்னதாக, 2024 ஆம் ஆண்டு, குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தில் (NCW) இருந்த தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்தப் பதவி, அரசியலில் முழுமையாக ஈடுபட அவருக்கு தடையாக இருந்தது என்று அவர் விளக்கினார். அந்தப் பதவியிலிருந்து விலகியதன் மூலம், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை (BJP) வலுப்படுத்துவதற்கான தனது நோக்கத்தை வெளிப்படுத்தினார். ஆனால், அது தேர்தலில் போட்டியிடுவதற்காக அல்ல, கட்சியின் வளர்ச்சிக்காகவே என்பதை அவர் தெளிவுபடுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கிறித்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்.. வைகோ கண்டனம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com