Atal Canteen: ரூ.5க்கு உணவு வழங்கும் வகையில் டெல்லியில் அடல் கேண்டீன் (உணவகம்) தொடங்கப்பட்டுள்ளது.
Atal Canteen: ரூ.5க்கு உணவு வழங்கும் வகையில் டெல்லியில் அடல் கேண்டீன் (உணவகம்) தொடங்கப்பட்டுள்ளது.

Published on: December 26, 2025 at 2:17 pm
புதுடெல்லி, டிச.26, 2025: முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 101ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, வியாழக்கிழமை (டிச.25, 2025) தேசிய தலைநகரில் ‘அடல் கேண்டீன் (உணவகம்)’ தொடங்கப்பட்டது.
இதனை டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் மத்திய அமைச்சர் மனோஹர் லால் இணைந்து தொடங்கி வைத்தனர்.
கூடுதலாக 55 உணவகங்கள்
இந்தத் திட்டத்தை தொடங்கிவைத்து பேசிய டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, “இது நகரில் உள்ள ஏழை மற்றும் உழைக்கும் மக்களுக்கு பெரும் திட்டமாகும். இங்கு, மக்கள் வெறும் ₹5க்கு உணவு பெறலாம்.
மேலும், இன்று முதல் 45 கான்டீன்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. மீதமுள்ள 55 உணவகங்கள் அடுத்த 15 நாட்களில் திறக்கப்படவுள்ளன” என்றார்.
மனோகர் லால் கட்டார் பேட்டி
இந்நிகழ்ச்சியில் மனோகர் லால் கட்டார், “இந்த முயற்சி கோடிக்கணக்கான மக்களுக்கு பயனளிக்கும். “ஒருவரும் பசியுடன் படுக்கக்கூடாது” என்ற அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் இத்திட்டம் செயல்படும்” என்றார்.
இதையும் படிங்க: ஒரு மாசத்துல இந்தி கத்துக்கோங்க.. சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க கவுன்சிலர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.




© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com