Indian Railways; ரயில் திருத்த கட்டணங்கள் இன்று (டிச.26, 2025) முதல் அமலாகின்றன.
Indian Railways; ரயில் திருத்த கட்டணங்கள் இன்று (டிச.26, 2025) முதல் அமலாகின்றன.

Published on: December 26, 2025 at 4:15 pm
புதுடெல்லி, டிச.26, 2025: ரயிலில் திருத்தப்பட்ட கட்டணங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலாகின்றன. பயணிகளுக்கான செலவினத்தையும், சேவையின் நிலைத்தன்மையையும் சமநிலைப்படுத்தும் நோக்கில், இந்திய இரயில்வே தனது பயணக் கட்டண அமைப்பை மறுசீரமைத்துள்ளது.
புறநகர் சேவைகள் மற்றும் சீசன் டிக்கெட்டுகள்:
புறநகர் (சபர்பன்) மற்றும் நான்சபர்பன் பாதைகளில் எந்த மாற்றமும் இல்லை.
இன்று முதல் பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே புதிய கட்டணங்கள் பொருந்தும்.
இன்று முன் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு கூடுதல் கட்டணம் இல்லை.
சாதாரண Non-AC (Non-Suburban) சேவைகள்
215 கி.மீ. வரை பயணங்களுக்கு கட்டண உயர்வு இல்லை.
216–750 கி.மீ. → ₹5 உயர்வு
751–1250 கி.மீ. → ₹10 உயர்வு
1251–1750 கி.மீ. → ₹15 உயர்வு
1751–2250 கி.மீ. → ₹20 உயர்வு
Sleeper Class Ordinary & First Class Ordinary:
இந்தப் பயணங்களுக்கு கி.மீ. ஒன்றுக்கு 1 பைசா உயர்வு.
மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள்
ஏசி அல்லாத மற்றும் ஏசி வகைகளில் கி.மீ. ஒன்றுக்கு 2 பைசா உயர்வு.
இதில் ஸ்லீப்பர், முதல் வகுப்பு, ஏசி நாற்காலி கார், ஏசி 3-அடுக்கு, ஏசி 2-அடுக்கு, ஏசி முதல் வகுப்பு ஆகியவை அடங்கும்.
முக்கிய ரயில்கள்
தேஜஸ் ராஜ்தானி, ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ, வந்தே பாரத், ஹம்ஸஃபர், அம்ரித் பாரத், தேஜஸ் போன்ற முக்கிய ரயில்களின் அடிப்படை கட்டணங்கள் வகை வாரியாக உயர்த்தப்பட்டுள்ளன.
மாற்றமில்லாத அம்சங்கள்
முன்பதிவு கட்டணம், அதிவேக கூடுதல் கட்டணம்,மற்றும் பிற கூடுதல் கட்டணங்களில் மாற்றம் இல்லை.
சரக்கு மற்றும் சேவை வரி விதிகள் மாறவில்லை.
கட்டணங்கள் வழக்கம்போல் செய்யப்படும்.
இதையும் படிங்க : இந்தியாவின் அடையாளம் வாஜ்பாய்.. பிரதமர் நரேந்திர மோடி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.




© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com