அபுதாபி இளவரசர்- மோடி சந்திப்பு; முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் கலீத் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Published on: September 10, 2024 at 12:23 am

Updated on: September 10, 2024 at 12:56 am

India UAE Strategic Partnership | ஐக்கிய அரபு அமீரக நாட்டின் அதிபரும், அபுதாபியின் பட்டத்து இளவரசருமான ஷேக் கலீத் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை திங்கள்கிழமை (செப்.9, 2024) சந்தித்துப் பேசினார்.

தொடர்ந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு பிரதமர் அன்பான வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது, இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விரிவான மூலோபாய கூட்டாண்மையின் முன்னேற்றம் குறித்து தலைவர்கள் பேசினார்கள்.

மேலும் கூடுதல் ஒத்துழைப்பதற்கான வழிகளை ஆராய்ந்தனர். விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA) மற்றும் சமீபத்திய இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் (BIT) ஆகியவை குறித்தும் பேசப்பட்டது. இந்த இரு ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக செயல்படுகின்றன.

இவை, பொருளாதார மற்றும் வணிக உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இரு தலைவர்களும் அணுசக்தி, முக்கியமான கனிமங்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களில் ஆராய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

தொடர்ந்து, பாரம்பரிய மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பல முக்கிய ஒப்பந்தங்கள் இந்தப் பயணத்தின் போது கையெழுத்திடப்பட்டன.
அணுமின் நிலைய செயல்பாடுகள், பராமரிப்பு மற்றும் பரஸ்பர முதலீட்டு வாய்ப்புகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அணுசக்தி ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேலும், அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி (ADNOC) மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) ஆகியவற்றுக்கு இடையே ஆண்டுதோறும் 1 MMTPA க்கு நீண்ட கால LNG சப்ளை ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, அபுதாபி பட்டத்து இளவரசர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பேசினார்.

இதையும் படிங்க : காத்திருந்த கெஜ்ரிவால்; கைவிட்ட காங்கிரஸ்: ஹரியானாவில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com