S Raghupathy: சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த முடியாது; மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தமிழக அரசியல் பற்றி தெரியாது என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
S Raghupathy: சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த முடியாது; மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தமிழக அரசியல் பற்றி தெரியாது என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

Published on: December 23, 2025 at 2:34 pm
Updated on: December 23, 2025 at 2:36 pm
சென்னை, டிச.23, 2025: தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த முடியாது என்றார்.
தொடர்ந்து பேசிய ரகுபதி, “ஒத்த கருத்துடைய கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. அப்படியென்றால் அவர், டி.டி.வி தினகரன் மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தை ஏற்றுக் கொள்வாரா? எனக் கேள்வியெழுப்பினார்.
இதையடுத்து, “பியூஷ் கோயலை பொறுத்தமட்டில் அவருக்கு தமிழ்நாட்டின் அரசியல் தட்பவெப்ப நிலை பற்றி எதுவும் தெரியாது. அவர் நினைப்பதும் நடக்காது” என்றார்.
மேலும், தமிழ்நாட்டில் எத்தனை முனை போட்டி ஏற்பட்டாலும் தி.மு.க. 2026 சட்டமன்ற தேர்தலில் வெல்லும்” என்றார்.
இதையும் படிங்க : ஆறு மாதத்திற்குள் இருமுறை.. ரயில் கட்டணம் உயர்வை திரும்பப்பெற ஓபிஎஸ் கோரிக்கை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.




© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com