New Delhi BJP councillor: வெளிநாட்டு கால்பந்து பயிற்சியாளரிடம், ஒரு மாதத்தில் இந்தி கத்துக்கோங்க என பா.ஜ.க பெண் கவுன்சிலர் ஒருவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
New Delhi BJP councillor: வெளிநாட்டு கால்பந்து பயிற்சியாளரிடம், ஒரு மாதத்தில் இந்தி கத்துக்கோங்க என பா.ஜ.க பெண் கவுன்சிலர் ஒருவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Published on: December 23, 2025 at 2:22 pm
புதுடெல்லி, டிச.23, 2025: டெல்லி (கிழக்கு) பட்பர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி (BJP) கவுன்சிலர் ரேனு சௌதரி ஒரு வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
வைரல் காணொலி
இது தொடர்பாக வெளியான வீடியோவில், அவர் கிழக்கு டெல்லி மயூர் விஹார் பகுதியில் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து வந்த ஒரு வெளிநாட்டு கால்பந்து பயிற்சியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
அந்த பயிற்சியாளரை “ஆப்பிரிக்க” நாட்டு நபர் என அவர் குறிப்பிடுகிறார். மேலும், அவர், “ஒரு மாதத்திற்குள் ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும், இல்லையெனில் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க பயன்படுத்தும் MCD பூங்கா உங்களிடம் இருந்து எடுத்துக்கொள்ளப்படும்” என்று எச்சரிக்கிறார்.
அந்த பயிற்சியாளர் பல ஆண்டுகளாக அந்த பூங்காவில் குழந்தைகளுக்கு கால்பந்து பயிற்சி அளித்து வருகிறார். இந்த நிலையில், இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த சம்பவம் மொழி, கலாச்சாரம் மற்றும் வெளிநாட்டு நபர்களின் உரிமைகள் குறித்த விவாதத்தை தூண்டியுள்ளது.
சமூக ஊடகங்களில் பலர், “பொது இடங்களை பயன்படுத்தும் உரிமை மொழி அறிவுடன் தொடர்புபடுத்தப்படக்கூடாது” என்று விமர்சனம் செய்துள்ளனர். சிலர், “உள்ளூர் மொழியை கற்றுக்கொள்வது நல்லது” என்றாலும், அச்சுறுத்தல் முறையில் கூறுவது தவறு எனக் கூறுகின்றனர்.
இந்தச் சம்பவம், டெல்லியில் மொழி–கலாச்சார உணர்வுகள் மற்றும் வெளிநாட்டு சமூகங்களின் நிலை குறித்து பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க ராகுல் இன்னமும் குழந்தையாக இருக்கிறார்.. புயலை கிளப்பிய ஜெர்மன் பயணம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com