India vs Bangladesh | சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார்.
India vs Bangladesh | சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார்.
Published on: September 10, 2024 at 12:00 am
India vs Bangladesh | வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா- வங்கதேசம் அணிகள் மோதும் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
இது குறித்து ஜெய் ஷா, “வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளது.
இந்த டெஸ்ட் தொடர் 2024-25 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சர்வதேச ஹோம் சீசனின் தொடக்கத்தைக் குறிக்கும். இந்தியாவும் வங்கதேசமும் மூன்று டி20 போட்டிகளிலும் விளையாட உள்ளம். இதற்கான அணி பின்னர் தேர்ந்தெடுக்கப்படும்” என்றார்.
தொடக்க ஆட்டக்காரர் யஷஷ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, சர்பராஸ் கான் உட்பட அனைத்து வழக்கமான வீரர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரிஷப் பந்த் முதல் தேர்வு கீப்பராக அணியில் சேர்க்கப்பட்டாலும், துருவ் ஜூரல் இரண்டாவது ஸ்டம்பராக 16 பேர் கொண்ட அணியில் உள்ளார்.
இந்த அணி முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடக்கிறது.
வங்கதேச டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி
ரோகித் சர்மா (சி), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (WK), துருவ் ஜூரல் (WK), ஆர் அஷ்வின், ஆர் ஜடேஜா , அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்
இதையும் படிங்க சென்னையில் இந்தியா- வங்கதேசம் டெஸ்ட் எப்போது? டிக்கெட் ரேட் என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com