Swiggy: ஸ்விகியில் சென்னை பயனர் ஒருவர் இந்தாண்டு ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக ஆணுறை (காண்டம்) வாங்கியுள்ளார். இது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
Swiggy: ஸ்விகியில் சென்னை பயனர் ஒருவர் இந்தாண்டு ரூ.1 லட்சத்துக்கும் அதிகமாக ஆணுறை (காண்டம்) வாங்கியுள்ளார். இது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

Published on: December 22, 2025 at 6:54 pm
சென்னை, டிச.22, 2025: ஸ்விகி இன்ஸ்டாமார்ட் தனது ஆண்டு இறுதி ஆர்டர் பகுப்பாய்வை வெளியிட்டுள்ளது. இதில், 2025 ஆம் ஆண்டில் இந்தியர்கள் எவ்வாறு பொருட்கள் வாங்கினர் என்பதற்கான சுவாரஸ்யமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அதாவது இதில், ஆண்டின் சிறிய மற்றும் பெரிய ஆர்டர்கள், தனித்துவமாகத் தோன்றிய ஷாப்பிங் கார்ட்கள், அதிகம் செலவழித்த பயனர்கள், அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்கள் உள்பட மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
சென்னை பயனர்…
இதில், ன்னை பயனர் ஒருவர், ஒரு ஆண்டில் ₹1 லட்சத்திற்கும் அதிகமாக ஆணுறைகள் (காண்டம்) வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. பாலினம் குறிப்பிடப்படாத அந்த பயனர், மொத்தம் 228 தனித்தனி ஆர்டர்கள் செய்துள்ளார்.
அதன்படி ஆணுறைகள் வாங்க அவரின் மொத்த செலவு ₹1,06,398 ஆகும். இதற்கிடையில், ஸ்விகி இன்ஸ்டாமார்ட் தனது ஆண்டு இறுதி அறிக்கையில், ஒவ்வொரு 127 ஆர்டர்களில் ஒன்றில் காண்டம் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிலும், குறிப்பாக செப்டம்பர் மாதத்தில், கண்டோம் ஆர்டர்கள் 24% அதிகரித்துள்ளன. இது 2025-இல் இந்தியர்களின் ஆன்லைன் ஷாப்பிங் பழக்கங்களில் கண்டோம் முக்கிய பங்கு வகித்ததை வெளிப்படுத்துகிறது.
இதையும் படிங்க: சீனியர் சிட்டிசன் பேங்க் FD ஸ்கீம்; ₹1 லட்சம் வட்டி வருவாய் பெறுவது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com