India New Zealand Free Trade deal: இந்தியா – நியூசிலாந்து நாடுகள் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் சிறப்புகள் குறித்து பார்க்கலாம்.
India New Zealand Free Trade deal: இந்தியா – நியூசிலாந்து நாடுகள் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் சிறப்புகள் குறித்து பார்க்கலாம்.

Published on: December 22, 2025 at 2:07 pm
புதுடெல்லி, டிச.22, 2025: இந்தியா – நியூசிலாந்து இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
FTA ஒப்பந்தம் நிறைவு
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இதனை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நியூசிலாந்து பிரதமர் கிரிஸ்டோபர் லக்சன் இன்று (திங்கள்கிழமை) அறிவித்தனர். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, லக்சனுடன் தொலைபேசி உரையாடல் நடத்தினார்.
வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
இந்த ஆண்டு மார்ச் மாதம், கிரிஸ்டோபர் லக்சன் இந்தியா வந்தபோது பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. அதில், இரு நாடுகளின் அரசியல் விருப்பமும், உறுதியும் வெளிப்படுத்தப்பட்டது.
ஒப்பந்தத்தின் முக்கியத்துவம்
புதிய வாய்ப்புகள்
புதுமையாளர்கள், தொழில்முனைவோர், விவசாயிகள், MSME நிறுவனங்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும். அடுத்த 5 ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகம் இரட்டிப்பாகும் என இரு பிரதமர்களும் நம்பிக்கை தெரிவித்தனர். அடுத்த 15 ஆண்டுகளில் 20 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை நியூசிலாந்து இந்தியாவில் மேற்கொள்ளும்.
இந்த ஒப்பந்தம் இந்தியா – நியூசிலாந்து உறவுகளில் புதிய வரலாற்று அத்தியாயத்தை தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அணு எரிசக்தி துறையில் திருத்தம்.. சாந்தி மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com