Fixed Deposit: மூத்த குடிமக்கள் இந்த வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்து நல்ல வட்டி வருவாய் பெறலாம்.
Fixed Deposit: மூத்த குடிமக்கள் இந்த வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்து நல்ல வட்டி வருவாய் பெறலாம்.

Published on: December 20, 2025 at 12:46 pm
சென்னை டிசம்பர் 20, 2025: இன்றைய காலகட்டத்தில் ஃபிக்சட் டெபாசிட் போன்ற உறுதியான வருமான வாய்ப்புகளில் முதலீடு செய்யவே பெரும்பாலான முதலீட்டாளர்கள் விரும்புகின்றனர். குறிப்பாக இதுபோன்ற திட்டங்களுக்கு முதன்மையான முன்னுரிமை அளிக்கும் முதலீட்டாளர்களில் மூத்த குடிமக்கள் வருகின்றனர்.
இவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ஈக்விட்டி ஃபண்ட் உள்ளிட்ட பங்கு சார்ந்த முதலீட்ட திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புவதில்லை. மாறாக சில மூத்த குடிமக்கள் புதிய புதிய திட்டங்களில் முதலீடு செய்தாலும், முதன்மைத் தேர்வாக வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்கள் உள்ளன.
இந்த நிலையில் மூத்த குடிமக்களுக்கு நல்ல வட்டி வருவாய் வழங்கும், வங்கி குறித்தும் அதன் ஸ்கீம் குறித்தும் பார்க்கலாம்.
₹1 லட்சம் வரை வட்டி வருமானம் பெறும் வழி
இந்தியாவின் முன்னணி வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஓராண்டு, மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகள் என பல்வேறு காலகட்டங்களில் பிக்சட் டெபாசிட் திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில் வங்கியின் 3 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் மற்றும் அதன் வட்டி விகிதம் குறித்து பார்க்கலாம்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியை பொருத்தமட்டில் மூத்த குடிமக்களுக்கு மூன்று ஆண்டுகால பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.25% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இத்திட்டத்தில் ரூபாய் மூன்று லட்சம் முதலீடு செய்தால், மூன்று ஆண்டுகால முடிவில் ரூபாய் 3 லட்சத்து 72 ஆயிரத்து 164 வட்டி வருவாயாக கிடைக்கும்.
அதுவே ரூபாய் 6 லட்சம் முதலீடு செய்தால், ₹7.44 லட்சம் ரிட்டன் கிடைக்கும். ஆக வட்டியாக மட்டும் ரூபாய் 1.44 லட்சம் வருவாய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; மாதம் ₹2 ஆயிரம் SBI எஸ்.ஐ.பி முதலீடு.. ₹.24.40 லட்சம் ரிட்டன்.. இந்த ஸ்கீமை செக் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com