Actor sreenivasan passed away: இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் மூத்த நடிகர் என பன்முகத்திறமை கொண்ட மலையாளத்தின் ஸ்ரீனிவாசன் இன்று ( டிசம்பர் 20, 2025) காலை காலமானார்.
Actor sreenivasan passed away: இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் மூத்த நடிகர் என பன்முகத்திறமை கொண்ட மலையாளத்தின் ஸ்ரீனிவாசன் இன்று ( டிசம்பர் 20, 2025) காலை காலமானார்.

Published on: December 20, 2025 at 10:44 am
திருவனந்தபுரம் டிசம்பர் 20, 2025; தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகராக அறியப்பட்ட மலையாளத்தின் சீனிவாசன் இன்று (சனிக்கிழமை) காலமானார்.
நடிகர் ஸ்ரீனிவாசன் இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் என பன்முக திறமைகளை கொண்டவர் ஆவார். இவருக்கு இதய பிரச்சனை இருந்து வந்துள்ள நிலையில், கொச்சியில் காலமானார். மறைந்த நடிகர் ஸ்ரீனிவாசனுக்கு 69 வயதாகிறது.
இவர், மனைவி விமலா மற்றும் மகன்கள் வினித் மற்றும் தயன் ஆகியோருடன் வாழ்ந்து வந்தார்.
நடிகர் ஸ்ரீனிவாசனின் பூர்வீகம்
நடிகர் ஸ்ரீனிவாசன் கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலச்சேரி அருகிலுள்ள பட்டியம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். ஏப்ரல் 6, 1956 ஆம் ஆண்டு பிறந்த இவர், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் பயணித்து வருகிறார்.
இவர் 225 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்; இவர் நாடோடிக்காற்று, அழகிய ராவணன், சந்தேசம், வரவேல்பு உள்ளிட்ட படங்களில் திரைக்கதைக்காக அறியப்படுகிறார்.
ஸ்ரீனிவாசன் இயக்கிய திரைப்படங்கள்
மலையாளத் திரையுலகில் சில குறிப்பிட்டத்தக்க படங்களையும் நடிகரும் திரைகதை ஆசிரியருமான ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். அந்தத் திரைப்படங்கள், வடக்குநோக்கியாந்திரம் மற்றும் சிந்தாவிஸ்தாயய ஆகும்.
திரைத்துறையில் நடிகர் சீனிவாசன் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்; அதில் தேசிய விருது மற்றும் ஐந்து கேரள மாநில விருதுகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; பாடலின் சக்ரவர்த்தி SPB திருவுருவ சிலை திறப்பு.. வெங்கையா நாயுடு பெருமிதம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com