DMK protest: மத்திய அரசுக்கு எதிரான திமுகவின் போராட்டத்தை வெற்றி பெற செய்வீர் என அறிக்கை வெளியிட்டுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
DMK protest: மத்திய அரசுக்கு எதிரான திமுகவின் போராட்டத்தை வெற்றி பெற செய்வீர் என அறிக்கை வெளியிட்டுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

Published on: December 18, 2025 at 7:33 pm
சென்னை, டிச 18, 2025: ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிய விவகாரம் தொடர்பாக டிசம்பர் 24ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ள நிலையில் அந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெற செய்வீர் என அறிக்கை வெளியிட்டுள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் பெயரிலிருந்து தேசத்தந்தை மகாத்மா காந்தி பெயரை நீக்குவதற்கு நரேந்திர மோடி அரசு நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்திருப்பது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.
இந்த திட்டத்தின் பெயரை, ‘விக் ஷித் பாரத் கேரன்ட்டி பார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்) (விபி-ஜி ராம்-ஜி)’ என பெயர்மாற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும்,நரேந்திர மோடி அரசு ,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் நோக்கத்தை சிதைத்து கோடிக்கணக்கான ஏழை மக்களை வயிற்றில் அடிக்கும் வகையில் திட்டத்தையே நீர்த்துப் போக செய்ய முயற்சிக்கிறது” என தெரிவித்துள்ளார்.
திமுக ஆர்ப்பாட்டம்
மேலும், “ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தையே சிதைத்து இருக்கிற ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாட்டில் டிசம்பர் 24ஆம் தேதி புதன் கிழமை காலை 10 மணிக்கு ஒன்றிய தலைநகரங்களில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டு அறப்போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குப்பைக் கிடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் கைது: அடக்குமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது.. டி.டி.வி. தினகரன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com