Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
February 6, 2025
Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Published on: September 9, 2024 at 2:49 pm
Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு பகுதி வழியாக ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு நவ்ஷேராவின் லாம் செக்டாரில் எல்லைக்கு அப்பால் இந்த ஊடுருவல் முயற்சி நடந்துள்ளது. இது குறித்து கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் சம்பவ பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
இந்த நிலையில், செப்டம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளின் இடைப்பட்ட இரவில் இந்த ஊடுருவல் முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது.
என்கவுன்டரைத் தொடர்ந்து இராணுவத் துருப்புக்கள் அப்பகுதியில் ராணுவ அதிகாரிகள் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
ஜம்மு பகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதால், சமீபகாலமாக பிர் பஞ்சால் மலைத்தொடர் இதுபோன்ற என்கவுண்டர்களின் மையமாக மாறியுள்ளது, இது பாதுகாப்புப் படையினருக்கும் சவாலாக மாறிவருகிறது.
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, பள்ளத்தாக்கில் பயங்கரவாத சம்பவங்கள் குறைந்தாலும், ரஜோரி, பூஞ்ச், தோடா, கிஷ்த்வார் மற்றும் கதுவா உள்ளிட்ட ஜம்மு பகுதியின் வனப்பகுதிகளில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க ஜம்மு காஷ்மீர்- சட்டப்பிரிவு 370 நீக்கம்; பயங்கரவாதம் முடிவுக்கு வந்ததா? ஃபரூக் அப்துல்லா
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com