Flights and trains delayed in Delhi: தேசிய தலைநகர் டெல்லியில் இன்று (டிச.16, 2025) அடர்ந்த பனிமூட்டம் காரணமாக, விமானங்கள் மற்றும் ரயில்கள் தாமதமாகின.
Flights and trains delayed in Delhi: தேசிய தலைநகர் டெல்லியில் இன்று (டிச.16, 2025) அடர்ந்த பனிமூட்டம் காரணமாக, விமானங்கள் மற்றும் ரயில்கள் தாமதமாகின.

Published on: December 16, 2025 at 11:34 am
Updated on: December 16, 2025 at 11:35 am
புதுடெல்லி, டிச.16, 2025: டெல்லியில், அடர்ந்த பனிமூட்டம் நிலவியதால், தேசிய தலைநகரில் விமானம் மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. டெல்லியில், குளிர் காற்றுடன் கூடிய பனிமூட்டம் காணப்பட்டது.
இதனால், அதிகாலை நேரங்களில் மிகவும் குளிர்ச்சியாக காணப்பட்டது. இந்தப் பனிமூட்டம் காரணமாக, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பல விமானங்கள் தாமதமாகியுள்ளன.
இந்நிலையில், பயணிகள், தங்களின் விமான தகவல்களைப் புதுப்பித்துக் கொள்ள சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், புதுடெல்லி ரயில் நிலையத்தில் பல ரயில்களும் தாமதமாக இயங்குகின்றன. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தகவலின்படி, இன்று காலை 6 மணிக்கு தில்லியில் வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மக்களவையில் அணுசக்தி மசோதா தாக்கல்.. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com