Veer Savarkar International Impact Award 2025: வீர சாவர்க்கர் தேசத்திற்கான அர்ப்பணிப்பு மூலம் ஊக்குவிக்கிறார் என வீரசாவர்க்கர் சர்வதேச விருது வழங்கும் விழாவில் ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் பேசினார்.
Veer Savarkar International Impact Award 2025: வீர சாவர்க்கர் தேசத்திற்கான அர்ப்பணிப்பு மூலம் ஊக்குவிக்கிறார் என வீரசாவர்க்கர் சர்வதேச விருது வழங்கும் விழாவில் ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் பேசினார்.

Published on: December 13, 2025 at 3:33 pm
புதுடெல்லி, டிச.13, 2025: வீர சாவர்கர் இன்டர்நேஷனல் இம்பாக்ட் அவார்ட்ஸ் 2025 நிகழ்ச்சி நியூடெல்லியில் உள்ள என்.டி.எம்.சி மாநாட்டு ஹாலில் நடத்தியது. இந்நிகழ்ச்சியில் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் உரையாற்றிய மனோஜ் சின்ஹா, “வீர சாவர்கர் இன்டர்நேஷனல் இம்பாக்ட் அவார்ட்ஸ் பெற்ற அனைவருக்கும் நான் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன். வீர சாவர்கர் அவர்கள் தேசத்திற்கான அர்ப்பணிப்பால் எங்களை தொடர்ந்து ஊக்குவிக்கும் புரட்சியாளர் ஆவார்.
சமூகத்தை வலுப்படுத்தும் பணியில், ஹெச்.ஆர்.டி.எஸ் இந்தியா (HRDS INDIA) உடன் எங்கள் முயற்சியின் முதல் கட்டமாக ஜம்மு & காஷ்மீரில் 1,500 புதிய நவீன வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த முயற்சி எண்ணற்ற வாழ்க்கைகளை மேம்படுத்தி, குடும்பங்களுக்கு சமூக பாதுகாப்பை வழங்கும். இதன் மூலம் சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் சுயநம்பிக்கை, நேர்மை மற்றும் நீதி ஆகியவற்றுடன் முன்னேற முடியும்” என்றார்.
விழாவில் வரவேற்பு உரை நிகழ்த்திய சுவாமி ஆத்ம நம்பி ஜி, “ஜம்மு & காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா வீர சாவர்கர் இன்டர்நேஷனல் இம்பாக்ட் அவார்ட்ஸ் விழாவில் கலந்து கொண்டது எங்களுக்கு பெருமை. அவரது வருகை இந்த மேடையின் தேசிய முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. மேலும், சமூக முன்னேற்றம், புறக்கணிக்கப்பட்ட சமூகங்களை வலுப்படுத்துதல் மற்றும் அர்த்தமுள்ள தேச கட்டுமான முயற்சிகளை முன்னெடுக்கும் ஹெச்.ஆர்.டி.எஸ் இந்தியாவின் பார்வையை வலுப்படுத்துகிறது” என்றார்.
இந்த விழாவில் வீர சாவர்கர் அவர்களுக்கு ஒலி-ஒளி அஞ்சலி நிகழ்த்தப்பட்டது. மேலும், பத்மஸ்ரீ வி. ஜெயராம ராவ் அவர்களின் சீடரான வைஷ்ணவி பி.ஜே அவர்கள் பாரம்பரிய ந்ரித்யம் நடன நிகழ்ச்சியும் நடந்தது. இந்த விழாவில் தேசிய தலைவர்கள், சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறைகளின் சாதனையாளர்கள் கலந்து கொண்டு, சுதந்திரவீரர் வினாயக் தாமோதர் சாவர்கர் அவர்கள் வலியுறுத்திய தைரியம், சீர்திருத்தம் மற்றும் தேச கட்டுமான பண்புகளை பிரதிபலிக்கும் நபர்களை கௌரவித்தனர்.
முக்கிய விருந்தினர்களில் ஹெச்.ஆர்.டி.எஸ் இந்தியா (HRDS INDIA) தலைவர் சுவாமி ஆத்ம நம்பி ஜி, முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் ஹெச்.ஆர்.டி.எஸ் இந்தியா தலைவர் டாக்டர் எஸ். கிருஷ்ணகுமார், ஹெச்.ஆர்.டி.எஸ் இந்தியா துணைத் தலைவர் கே. ஜி. வேணுகோபால் மற்றும் ஹெச்.ஆர்.டி.எஸ் இந்தியா நிறுவனர் செயலாளர் அஜி கிருஷ்ணன் ஆகியோர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா.. பா.ம.க, தே.மு.தி.க நிலைப்பாடு என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com