Mutual Fund: ரூ.3 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு மற்றும் ரூ.3 லட்சம் லம்ப்சம் முதலீடு; இதில் எதில் பெஸ்ட் ரிட்டன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
Mutual Fund: ரூ.3 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு மற்றும் ரூ.3 லட்சம் லம்ப்சம் முதலீடு; இதில் எதில் பெஸ்ட் ரிட்டன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

Published on: November 16, 2025 at 12:54 pm
சென்னை, நவ.16, 2025: இந்திய முதலீட்டாளர்களிடையே சமீபத்திய ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்டுகள் பிரபலமான முதலீட்டு விருப்பமாக உருவெடுத்துள்ளன. இதில், பல்வேறு திட்டங்கள் வழங்கப்படுவதால், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் நாடு முழுவதும் உள்ள முதலீட்டாளர்களுக்கு முறையாக செல்வத்தை உருவாக்க வாய்ப்பளிக்கின்றன.
மேலும், முதலீடுக்கு கூட்டுத்தொகையின் சக்தி காரணமாக, நிலையான வைப்புத்தொகை போன்ற பாரம்பரிய கருவிகளுடன் ஒப்பிடும்போது மியூச்சுவல் ஃபண்டுகள் ஒப்பீட்டளவில் அதிக வருமானத்தை வழங்குகின்றன. எனினும் இதில் ரிஸ்க் காணப்படுகின்றன என்பதும் மறுப்பதற்கில்லை. இந்த நிலையில், ரூ.3 ஆயிரம் எஸ்.ஐ.பி மற்றும் ரூ.3 லட்சம் லம்ப்சம் முதலீட்டில் எதில் பெஸ்ட் ரிட்டன் என்பது குறித்து பார்க்கலாம்.
ரூ.3 ஆயிரம் எஸ்.ஐ.பி
ரூ.3 ஆயிரம் பணத்தை எஸ்.ஐ.பி மூலமாக 10 ஆண்டுகள் முதலீடு செய்தால், 12 சதவீதம் வருவாய் வைத்து கணக்கீட்டால் கூட முதிர்வின்போது ரூ.6.72 லட்சம் ரிட்டன் கிடைக்கும். நாம் செய்த முதலீடு ரூ.3.6 லட்சமாக இருக்கும்.
ரூ.3 லட்சம் லம்ப்சம் முதலீடு
அதுவே ரூ.3 லட்சம் லம்ப்சம் முதலீடாக 10 ஆண்டுகள் செய்தால் 12 சதவீதம் வருவாய் வைத்தால் கூட ரூ.9.32 லட்சம் வரை வருவாய் கிடைக்கும். இதில் எதிர்பார்க்கப்படும் வருவாய் ரூ.6.32 லட்சம் ஆகும்.
Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடுக்கு சந்தை தொடர்பான அபாயங்களை தெரிந்துவைத்துக் கொள்ளவும். மேலும், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் சான்றளிக்கப்பட்ட உறுதியான வருமான வாய்ப்புகள் எதுவும் இல்லை.
இதையும் படிங்க: மாதம் ரூ.11 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு, ரூ.12.50 லட்சம் ரிட்டன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com