Thiruthuraipoondi: திருத்துறைப்பூண்டியில் ஏற்பட்ட கார் விபத்தில், காரின் ஓட்டுனர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.
Thiruthuraipoondi: திருத்துறைப்பூண்டியில் ஏற்பட்ட கார் விபத்தில், காரின் ஓட்டுனர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.

Published on: November 9, 2025 at 5:41 pm
திருவாரூர், நவம்பர் 9, 2025: திருவாரூர் மாவட்டம் அருகே உள்ள திருத்துறைப்பூண்டி அருகே தடுப்புச் சுவரில் மோதி கார் ஒன்று விபத்தில் சிக்கியது. வந்த வேகத்தில் கார் தடுப்பு சுவரில் மோதிய நிலையில் அருகில் இருந்த புயல் காட்டுக்குள் கார் தூக்கி வீசப்பட்டுள்ளது. இந்த நிலையில் காரில் தீ பற்றியதாக கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்டு காரில் தீ பற்றிய நிலையில் தீ மல மலவென கார் முழுவதும் பரவியது. இந்த நிலையில் காரில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் தீ பற்றி எரிந்தது எப்படி? விபத்துக்கு காரணம் என்ன? வேறு ஏதேனும் சதி திட்டங்கள் உள்ளதா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் விபத்தில் சிக்கி அதிலிருந்த ஓட்டுநர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. எனினும் காரின் ஓட்டுனர் உள்ளிட்ட இதர விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. போலீசார் இது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் முடிவுகள் வெளியிடப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுக மாவட்ட செயலாளர்கள் காணொளி கூட்டம்; SIR குறித்து ஆலோசனை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com