Natham Viswanathan: அரசியல் அனுபவம் இல்லை என்ற போதிலும் திமுகவை எதிர்ப்பதால் வாழ்த்தலாம் என நடிகர் விஜய் மறைமுகமாக பாராட்டியுள்ளார் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.
Natham Viswanathan: அரசியல் அனுபவம் இல்லை என்ற போதிலும் திமுகவை எதிர்ப்பதால் வாழ்த்தலாம் என நடிகர் விஜய் மறைமுகமாக பாராட்டியுள்ளார் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.

Published on: November 9, 2025 at 1:26 pm
சென்னை நவம்பர் 9 2025; அரசியலில் அனுபவம் இல்லை என்ற போதிலும், திமுகவை எதிர்ப்பதால் வாழ்த்தலாம் என நடிகர் விஜய்யை மறைமுகமாக பாராட்டி பேசி உள்ளார் முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான நத்தம் விஸ்வநாதன்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல், 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மிகப்பெரிய கூட்டணிகளை அமைக்கும் பணிகளில் தற்போதைய ஆளும் கட்சியான திமுகவும் முன்னாள் ஆளும் கட்சியான அதிமுகவும் தீவிரம் காட்டி வருகின்றன.
திமுகவை பொருத்தமட்டில் அக்கட்சியின் கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன.
அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா பிரதான கட்சியாக உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் உறுதியான நிலைப்பாட்டை இன்னமும் தெரிவிக்கவில்லை.
நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் தங்களது கூட்டணி நிலைப்பாடு குறித்து இன்றளவும் எவ்வித அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகளை வெளியிடவில்லை.
எனினும் அவர் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் என அட்டச்சியின் மூத்த தலைவர்கள் விரும்புகின்றனர். தமிழக வெற்றி கழகம் அதிமுக கூட்டணிக்கு வரும்போது அது மிகப்பெரிய கூட்டணியாக மாறும் என அரசியல் நோக்கர்களும் கருதுகின்றனர்.
இந்த நிலையில் அதிமுக மூத்த தலைவர் நத்தம் விஸ்வநாதன்,” அரசியல் அனுபவம் இல்லை என்ற போதிலும் திமுகவை எதிர்ப்பதால் வாழ்த்தலாம்” என நடிகர் விஜய்யை மறைமுகமாக பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க 51 கோடி வாக்காளர்கள்.. தமிழ்நாடு உள்பட 9 மாநிலங்கள்.. வாக்காளர் தீவிர திருத்தம் தொடக்கம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com