இஸ்ரேலிய பணயக் கைதிகள் 7 பேரை விடுத்த ஹமாஸ்.. உறுதிப்படுத்திய இஸ்ரேல்!

Gaza ceasefire: ஏழு பணயக்கைதிகளை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஹமாஸ் ஒப்படைத்தது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Published on: October 13, 2025 at 12:26 pm

காசா, அக்டோபர் 13, 2025: இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட முதல் குழுவாக ஹமாஸ் ஏழு இஸ்ரேலிய பணயக்கைதிகளை திங்கள்கிழமை (அக்.13, 2025) சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் காவலுக்கு மாற்றியது.

பணயக்கைதிகளின் நிலை குறித்து உடனடி அறிவிப்பு எதுவும் இல்லை. தற்போது இஸ்ரேல் பிடித்து வைத்திருக்கும் 1,900க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகளுக்கு பதிலாக மொத்தம் 20 இஸ்ரேலிய பணயக்கைதிகள் பரிமாறிக்கொள்ளப்படுவார்கள் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, முதல் குழு செஞ்சிலுவைச் சங்கத்தை அடைந்துவிட்டதாக இஸ்ரேலிய தொலைக்காட்சி சேனல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இதனால், பணயக்கைதிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

இதற்கிடையில், வரும் நாளில் காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகள் விடுதலை, பாலஸ்தீன கைதிகள் விடுதலை மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : அந்தரங்க உறுப்புகளை தொட அனுமதிக்காதீர்.. பாடம் எடுத்த ஆசிரியை.. வைரல் வீடியோ!

இஸ்ரேல், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை.. ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை.!
Israeli airstrike on Iran

இஸ்ரேல், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை.. ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை.!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com