Qatar Airways: சைவம் உட்கொள்ளும் பயணிக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டதாகவும், இதனால் அவர் மூச்சுத் திணறி இறந்ததாகவும் கத்தார் ஏர்வேஸ்க்கு எதிராக வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Qatar Airways: சைவம் உட்கொள்ளும் பயணிக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டதாகவும், இதனால் அவர் மூச்சுத் திணறி இறந்ததாகவும் கத்தார் ஏர்வேஸ்க்கு எதிராக வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Published on: October 10, 2025 at 9:17 pm
கொழும்பு, அக்.10, 2025: 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் இருந்து. லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து கொழும்புக்கு சென்ற தெற்கு கலிபோர்னியாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இருதயநோய் நிபுணரான டாக்டர் ஜெயவீர, சைவ உணவை ஆர்டர் செய்திருந்தார்.
ஆனால் அவருக்கு “அசைவ” உணவு பரிமாறப்பட்டு உள்ளது. மேலும், உணவில் கிடந்த “இறைச்சியை சாப்பிடுங்கள்” என்று கூறப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உணவைச் சாப்பிடும்போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சுயநினைவை இழந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த விமானம் ஸ்காட்லாந்தின் எடின்பர்க்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து, டாக்டர் ஜெயவீரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், ஆகஸ்ட் 3, 2023 அன்று ஆஸ்பிரேஷன் நிமோனியா காரணமாக இறந்தார். இது தற்செயலாக உணவு அல்லது சாப்பிட்டதால் ஏற்பட்டதா என குழப்பம் ஏற்பட்டது.
நீதிமன்றத்தில் வழக்கு
இந்த நிலையில், டாக்டர் அசோக ஜெயவீரவின் மகன் சூர்யா ஜெயவீர நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த வழக்கில், விமான நிறுவனம் முன்கூட்டிய ஆர்டர் செய்யப்பட்ட சைவ உணவை வழங்கத் தவறியதாகவும், தனது தந்தையின் மருத்துவ அவசரநிலைக்கு உரிய முறையில் பதிலளிக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சூர்யா, அலட்சியம் மற்றும் தவறான மரணத்திற்காக, சட்டப்பூர்வ குறைந்தபட்ச தொகையான $128,821 இழப்பீடு கோருகிறார்.
மேலும், விமானப் பொறுப்பை நிர்வகிக்கும் சர்வதேச ஒப்பந்தமான மாண்ட்ரீல் விமானத்தில் ஏற்படும் இறப்பு மற்றும் காயம் தொடர்பான கோரிக்கைகளுக்கு சுமார் $175,000 சட்டப்பூர்வமாக செலுத்தும் வரம்பை நிர்ணயித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நோபல் பரிசை தவறவிட்ட ட்ரம்ப்.. வெனிசுலா மரியாவுக்கு அறிவிப்பு.. யார் இவர்? முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com