Dindigul: தி.மு.க. மூத்த எம்.எல்.ஏ ஒருவர் உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Dindigul: தி.மு.க. மூத்த எம்.எல்.ஏ ஒருவர் உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on: October 10, 2025 at 8:59 pm
திண்டுக்கல், அக்.10, 2025: தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திண்டுக்கல் வந்திருந்தார்.
இந்நிலையில், அவர் வியாழக்கிழமை (அக்டோபர் 9, 2025) வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது ரூபாய் 49 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சி மேடைக்கு வந்த வேடசந்தூர் எம்எல்ஏவும் முன்னாள் துணை சபாநாயகருமான காந்தி ராஜன் உதயநிதி ஸ்டாலினுக்கு மாலை அணிவித்துவிட்டு உடனே அவர் காலில் விழுந்தார்.
உதயநிதி அவரிடம் இது போன்ற செய்யக்கூடாது என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது அமைச்சர்கள் ஐ பெரியசாமி மற்றும் சக்கரபாணி எம்பி ஜோதிமணி எம்எல்ஏ செந்தில்குமார் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
தன்னைவிட வயதில் குறைவானவரான உதயநிதி ஸ்டாலின் காலில் திமுகவில் மூத்த எம்எல்ஏ காந்திராஜன் விழுந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காந்தியராஜன் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மாநில அரசின் சிறப்பு விசாரணை குழு மீது நம்பிக்கை இல்லை.. உச்ச நீதிமன்றத்தில் த.வெ.க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com